கவரிமான் இருப்பது உண்மையா?
கவரிமான் என்றொரு மான் வகையே கிடையாது. இமயமலையில் இருக்கும் ஒரு வகைக் காட்டு மாடு, சடைமுடியுடன் இருக்கும். கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. இதுவே கவரிமா. இமயமலையில் கடுங்குளிரில், பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு, உடம்பில் மயிரை இழந்துவிட்டால், குளிரில் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிடும்.
இதைத்தான் திருவள்ளுவர், மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா என்கிறார். மற்றபடி கவரிமான் அல்ல அது. அன்னப்பறவை போல, நாமாக உருவாக்கிய ஒரு உயிரினம்தான் கவரிமான்.
– தீபா வெண்ணிலா
ஒரு மருத்துவர் மேல் நம்பிக்கை இல்லை என்றால் இன்னொரு மருத்துவர் இடம் போவது போல. சில பக்தகோடிகள் இந்து மதத்தில் உள்ள பல கடவுள்களை (சிலைகளை) விட்டுவிட்டு இப்பொழுது சாய்பாபாவிடம் சென்றுள்ளனர்….பிரச்சனை தீர்ந்ததா…? பசி தீர்ந்ததா…? வறுமை ஒழிந்ததா …? வேற்றுமை நீங்கியதா…?
– தளபதி பாண்டியன்
இதோ இந்த படத்தில் மஞ்சள் நிற சட்டை போட்டிருக்கும் நிஜ பிரம்மா தன்னுடைய காலில் அழுத்திக்கொண்டு உங்களால் வணங்கப்படும் கடவுளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார். தலையில் தோன்றியவன் பிராமணன், பாதத்தில் தோன்றி யவன் சூத்திரன் என்றும் மனுதர்மம் வர்ணாசிரமம் வரையறுக்கிறது. அது உண்மையெனில் இந்த சிற்பியின் கால் பட்டு உருவாகும் கடவுள்சிலை சூத்திரன்தானே?
இன்னும் சில தினங்களில் இந்த சிலை உருவாக்கம் பூர்த்தியடைந்து கோயிலில் நிறுவப்பட்டுவிடும். வேடிக்கை என்னவெனில் மனு தர்மத்தால் பிராமணன் என்று வரையறுக்கப்பட்டவர் காலம் முழுவதும் இந்த சிலைக்கு பூஜை செய்வார். ஆனால் இதை உருவாக்கிய நிஜ பிரம்மாவோ(சிற்பி) கருவறைக்கு வெளியில் நின்று கைகூப்பி தொழுவார். என்னே ஒரு விந்தையான முரண்பாடு! இதுதான் இந்த நாட்டின் பெரும்பான்மை என்று சொல்லப்படும் மதத்தைப் பின்பற்றும் மக்களின் நிலை. என்னே ஒரு பாரபட்சம், என்னே ஒரு ஓரவஞ்சனை! ஆஹா பெருமைமிகு என் புண்ணிய பூமியின் பழமையான மதத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன், பூரிப்படைகிறேன்.
_ ராஜேஷ் தீனா
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் மழை வரவேண்டி வேத மந்திரம் ஓதி வேதவிற்பன்னர்கள் விசேஷ யாகம் செய்தனர் – செய்தி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மழை வரவேண்டி வேத மந்திரம் ஓதி வேதவிற்பன்னர்கள் விசேஷ யாகம் செய்தனர் _ செய்தி
சென்னை திருவல்லிகேணியில் உள்ள பிராமணர்கள் நலச் சங்கம் சார்பில் மழை வேண்டி வேத மந்திரம் சொல்லி வருண ஜெபம் செய்தனர் -_ செய்தி
மழையை மந்திரம் சொல்லி வரவழைக்கும் அளவிற்கு இவ்வளவு பெரிய அப்பாட்டக்கரான பார்ப்பனர்கள், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியா தங்கப்பதக்கங்களாக குவி குவியென குவிக்க ஏன் விசேஷ யாகம் செய்வதில்லை???!!!
-_ திராவிடப் புரட்சி
அன்பர்களே..! சாமி நித்தியானந்தா அவர்கள் சொன்னது: 100 கோவில்கள் கட்டுவதை விட ஒரு காலேஜ் கட்டுவது சிறந்தது.
ஏன் தெரியுமா?
கோவிலை விட காலேஜ்லதான் நிறைய ஃபிகரை பார்க்க முடியும்.
– ஜெயன் மேதில்
கேதார்நாத் ! முக்திநாத் ! பயணம் போக இந்து பக்தர்களுக்கு ரூ.40000 கொடுப்பது போல தமிழகத்தில் உள்ள கோவில்களை பார்ப்பதற்கும் இந்துக்களுக்கு ஜெயலலிதா பண உதவி செய்ய வேண்டும் ! – ராமகோபாலன் அப்படியானால் பகுத்தறிவாளர்களாகிய எங்களுக்கு உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்க ரூ. 50000 மும் திருச்சி பெரியார் மாளிகை ஈரோட்டில் பெரியார் காட்சியகம்
சென்னையில் பெரியார்திடல் சென்றுவர தமிழகஅரசு அவசியம் பணஉதவி செய்ய வேண்டும்!
மூடநம்பிக்கைக்கு எங்கள் வரிப்பணத்தை வாரிவழங்கும் ஜெயா அரசு பகுத்தறிவு பயணத்திற்கு ஏன் பணஉதவி செய்யக்கூடாது ?
-_ பெரியார் கைத்தடி
விளையாட்டில் இந்தியா சாதிப்பதில்லை என புலம்பும் பலரும் தன்னுடைய குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை என்பதே நிதர்சனம்!
ககன் நரங் இந்தியாவுக்காக முதல் பதக்கம் பெற்றுவிட்டார்.. அவர் பிறந்து வளர்ந்த ஊர் சென்னை. மெரீனா பீச்சில் பலூன் சுட்டு பழகியதே அவருடைய முதல் துப்பாக்கி சுடுதல்!
– ஆதிஷா வினோ
ஆவடி திருமுல்லைவாயில் கோவிலுக்கு வந்த பெண்ணை கற்பழித்த குருக்களை சிறையில் அடைத்தனர் காவல் துறையினர் ஸ்வாக !!!! கோவில் நல்லா உருப்படனும் ஸ்வாக !!!! கடவுள் மகிமையே மகிமை ஸ்வாக!!!!
– இ.வே.சதீசு குமார்
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஒரு செல்போன் வழங்குவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
முதலில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் கழிவறை கட்டி கொடுங்க….அப்புறம் செல்போன் கொடுக்கலாம்…
-_ பரனீதரன் கலியபெருமாள்