மத்தியப் பிரதேச குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையரான ஒரு பார்ப்பன நீதிபதி உயர்ஜாதித் திமிருடன் மிகவும் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்.
இந்த அமைப்பின் ஆணையராக உள்ள நீதிபதி ஷீலா கன்னா என்ற அந்தப் பெண், உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சை மய்யத்துக்குக் கொண்டு வரும் குழந்தைகளின் ஜாதகத்தைப் பார்த்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிகிச்சை மய்யத்தில் ஒரு பார்ப்பனப் பூசாரியை நியமியுங்கள்.
இந்த மய்யத்திற்குக் கொண்டு வரப்படும் ஒவ்வொரு குழந்தையின் ஜாதகத்தையும் இந்தப் பூசாரி சரி பார்க்கவேண்டும். குழந்தையின் ஜாதகத்தைப் பரிசீலித்த பிறகு, அக்குழந்தை பின்னாள்களில் நாட்டின் ஒரு நல்ல குடிமகனாக வருவான் என்று பூசாரி கருதினால், அக்குழந்தைக்கு மய்யத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். மற்றவர்களையெல்லாம், அவர்களின் விதிப்படி ஆகட்டும் என்று சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட வேண்டும். அரசுப் பணத்தை இது போல் விரயமாகச் செலவழிக்க நம்மால் இயலாது என்று அந்தப் பார்ப்பன அம்மையார் கூறினாராம்.
ஒரு தொண்டரிடம் பேசும்போது இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆனால், எழுத்து மூலமாக எதையும் அளிக்கவில்லை. இவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட உள்ளது. புதுடில்லியின் குழந்தைகள் உரிமை மய்யத்தின் இணைஇயக்குநர் பாரதி அலி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா போன்ற பல ஜாதி மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், மக்கள் தொகையில் மிகச் சிறு அளவில் உள்ள பார்ப்பன ஜாதியைச் சேர்ந்த ஓர் அம்மையார், அதிலும் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி, குழந்தைகளுக்கு ஜாதகம் பார்த்துச் சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும், ஜாதகம் சரியில்லாவிட்டால் சிகிச்சை அளிக்கத் தேவையில்லை என்றும் மிகவும் மனிதத் தன்மையற்ற முறையில், திமிர்த் தனமாகப் பேசியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான மாநில அரசு இருக்கும் துணிவில் அந்த அம்மையார் இது போன்று பேசுகிறார் என்று முற்போக்காளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்துத்துவா என்பது வாழ்க்கை நெறி; அது இந்துக்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமானது என்று அடிக்கடி ஆர்.எஸ்.எஸ்.வகையறாக்கள் கூறுவதுண்டு.ஆனால்,அது ஆளைக் கொள்ளும் வெறி என்பது இப்போது தெரிந்துவிட்டது. நாத்திகனுக்கு மருத்துவம் பார்க்கக்கூடாது என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரி ஒரு முறை சொன்னார்.அவ்வளவு மனிதாபிமானம் அவருக்கு?இவரது சீடர்கள்தான் இந்துத்துவாக்கள் என்பதை இந்த நீதிபதிப் பார்ப்பன அம்மையார் இப்போது நிரூபித்துள்ளார்.
இந்துத்துவா ஆளும் மண்ணில் என்னெவெல்லாம் நடக்கும் என்பதற்கு இது ஒன்றே உதாரணம்.மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்து மானிடத்தை வாழவைத்துக் கொண்டிருக்கும் இருபத்தோறாம் நூற்றாண்டில் இப்படியும் பேச யாரால் முடியும் இந்துத்துவாக்களைத் தவிர?