முகநூல் பேசுகிறது

ஜூன் 16-30

எங்க வீட்டுக்கு அருகில் மிக முக்கியமான மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் இடத்தில் உள்ள கோயிலில் குடமுழுக்கு விழா (பாப்பார பசங்க கும்பாபிஷேகம் என்றுதான் உச்சரிக்கிறாணுக) என்று சொல்லி அந்த பகுதி சாலையை மூன்று நாளாக குச்சி வச்சு கட்டி வேற்று பாதையில் சுற்றி போக சொல்லுகிறார்கள். ஒரு பய ஏன் என்று கேட்காமல் சுத்தி தான் போறான். அதே சமயம், நகர சுத்தி தொழிலாளி தங்களுடைய வாகனத்தை ஒரு பத்து நிமிஷம் சாலையில் ஒரு ஓரமா நிறுத்தி அங்கு இருக்கும் குப்பையை அள்ளும்போது ஏய் என்ன இன்னும் பாதையை அடைச்சுகிட்டு என்ன பண்ணுற? என்று பெரிய இவன் மாதிரி கேள்வி கேட்ப்பாணுக…. இந்த மாதிரி பேசுவதை இன்னிக்கு காலையில கூட பார்த்தேன்……இந்த  கூட்டத்தை எதனை கொண்டு அடிப்பது?
– – பரணீதரன் கலியபெருமாள் 29 மே 2012 இரவு 9 மணி

நாம் தமிழர் கட்சி பதுக்கிவைத்திருக்கும் அதன் கொள்கை ஆவணம் கிடைத்துவிட்டது. படிக்க படிக்க பரவசம். இன்னும் 365 நாட்களுக்கு ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவதற்கு செய்திகளை வாரி வழங்கியிருக்கிறது ….
# ஆணவத்தால அழிஞ்சவன பாத்திருக்கேன்
ஆவணத்தால் அழிபவனை இப்பதான் பாக்குறேன்.
— பிரபாகரன் அழகர்சாமி 7 ஜூன் 2012 இரவு 9:11 மணி

 

எளிய வழி!
பெரியாரின் பெயரை சொல்லி உங்களுக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கிவிட்டு பெரியாரை திட்டினால்
#நீங்களும் தமிழ் தேசியவாதியாகிவிடலாம்
– இனாமுல் ஹசன் 30 மே 2012 இரவு 8:34 மணி

 

‘தமிழ்நாட்டில் கடந்த 60 வருடங்களாக நாத்திகக் கருத்துகள் பரவி இருப்பதால் எங்களுடைய பீடத்தைத் தமிழ்நாட்டில் அமைப்பதில் நாங்கள் வெற்றி பெறவில்லை’ -_ நித்யானந்தா.
பருப்பு வேகலை -ங்கறத எவ்வளவு நாசூக்கா சொல்றான் பாருங்க!!
– மேகவண்ணன் புதியதடம் – 27 மே 2012 இரவு 9:12 மணி

வறுமை தாங்காமே தற்கொலை பண்ணிக்க போனியே? உசுரோட வந்து நிக்குறே?
உசுரோட இருக்குறதுக்கும் வறுமைதாங்க காரணம். பெட்ரோல் வாங்க முடியலை
– — -யுவ கிருஷ்ணா 25 மே 2012 பகல் 11:15 மணி

ஸ்கூல் சேர்ந்து படிக்கறதுக்கு கொழந்தைங்க பயப்படுதோ இல்லையோ, பெற்றோர் ரொம்ப பயப்பட வேண்டியிருக்கு 🙂
– யுவ கிருஷ்ணா 1 ஜூன் 2012 பகல் 10:53 மணி

முதலமைச்சரின் பெயர் அகிலேஷ் யாதவ்…
சிறிய வயதுள்ள முதல்வரின் அடையாளம் இது..
# உபியில் ஒரு பெரியார் பிறக்கவில்லை….
– மணிவர்மா 26 மே 2012 மாலை 4:19 மணி

டெல்லிக்குப் போகவேண்டிய சூழ்நிலை வந்தால், அவசர காரியங்களுக்கு எங்கே போறதுன்னு யோசிச்சிக்கிட்டேதான் இத்தனைநாள் போகாமல் இருந்தேன். இனி தைரியமா போவேன். திட்டக்குழு அலுவலகத்தில் 35லட்ச ரூபாய் செலவில் கட்டி வச்சிருக்கிற 2 டாய்லெட்டுகளும் அதிகாரிகளுக்கு மட்டுமில்லை.. பொதுமக்களும் பயன்படுத்தலாம்னு அறிக்கை விட்டு தெளிவுபடுத்தியிருக்காங்களே..
நீங்களும் வர்றீங்களா? 2 டாய்லெட் இருக்கே…
– கோவி.லெனின் 7 ஜூன் 2012 பகல் 11 மணி

டான்சி வழக்கில் குற்றத்தை உறுதிசெய்து ஜெ’ மனசாட்சிப்படி நடக்கச் சொன்னது உச்ச நீதிமன்றம்…
எல்லா ஊடகங்களும் மனசாட்சிப்படியே நடந்து கொண்டது…
பேரமைதி காத்தது..
இன்று
ராசா பிணையில்
வந்துள்ளார்….
உலகம் பிளந்துவிட்டதைப்போல
ஊடகம் கத்திக்கொண்டு இருக்கிறது…
இது ஊடகத்தின் ஜனநாயகம்..
– மணி வர்மா 20 மே 2012 மாலை 6:14 மணி

 

 

இது 0.9 சதவிகிதம் அதிகம் தேர்வடைந்ததற்கான செய்தியாக தெரியவில்லை. அடுத்த ஆண்டு சமச்சீர் கல்வியில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறக் கூடாது என்ற விருப்பத்தை யாருக்கோ தெரிவிப்பது போல உள்ளது. வருகிற ஆண்டுகளில், சமச்சீர் கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்தாலோ அல்லது மதிப்பெண்கள் குறைந்தாலோ அதற்கு தினமலர் போன்றோரே காரணமாக அமையும் அபாயம் உள்ளது.

திராவிடப் புரட்சி,  5 ஜூன் 2012 பகல் 12:15 மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *