நிகழ்ந்தவை

ஜூன் 16-30
  • மே 28இல் டெல்லியில் நடந்த காவிரி நீர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என கருநாடக அதிகாரிகள் கூறிவிட்டனர்.
  • சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாட்டால் மே 27, 28, 29 நாட்களில் மக்கள் தவித்தனர்.
  • ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் வருமானத்துக்கு அதிக சொத்து வழக்கில் மே 28இல் கைது செய்யப்பட்டார்.
  • நேபாள தேசிய அரசு மே 28இல் பதவி விலகியது. நவம்பர் 22இல் புதிய தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது.
  • பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தும், பால், மின், பேருந்துக் கட்டணத்தை எதிர்த்தும் மே 30இல் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது.
  • பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பா.ஜ.க., இடதுசாரிகள் மே 31இல் நடத்திய முழுஅடைப்பு தமிழகத்தில் தோல்வியடைந்தது. பிற மாநிலங்களில் முழு வெற்றி பெறவில்லை.
  • இந்திய ராணுவ தளபதி வி.கே.சிங் ஓய்வைத் தொடர்ந்து, ஜூன் 1இல் புதிய தளபதியாக பிக்ரம்சிங் பொறுப்பேற்றார்.
  • கர்நாடக பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு பிணை வழங்க ரூ.5 கோடி கையூட்டுப் பெற்றதாக, அய்தராபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பட்டாபி ராமாராவ் ஜூன் 1 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
  • லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ஜூன் 3 முதல் ரூ. 2 குறைக்கப்பட்டது.
  • எகிப்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஜூன் 2 அன்று ஆயுள் தண்டனை விதித்தது. உடனடியாக அவர் சிறை மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
  • சூரியனை வெள்ளி கடக்கும் அரிய நிகழ்வு ஜூன் 6இல் நிகழ்ந்தது. இனி இதுபோன்ற இயற்கை நிகழ்வு 2117ஆம் ஆண்டுதான் நிகழும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *