Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புதுப்பாக்கள்

கோவில்களில் ரகசிய அறைகள்

பாழ்படுகிறது
தமிழ் மண்
ஆரிய விதைகள்

எப்படி விடியும்மூடர்களே
இரவு ஜெபம்

போதாது பூமிக்கு
ஆயிரம் எடிசன்கள்
மகாதீபம்

துடிக்கின்றன
தூக்கைத் தாங்க
கழு மரங்கள்

அன்று யாழ்ப்பாணம்
இன்று கோட்டூர்புரம்
மனு சூழ்ச்சி

தயாராகுமா
தொல்லியல் துறை?
மடங்கள், மடாலயங்கள்!

உயரத்தில் தேசியக்கொடி
கீழே நிர்வாணங்கள்
ஜெய் ஹிந்த்

உலக வங்கியில் கடனாளி
உள்ளூர்க் கோவில்களில்
ரகசிய அறைகள்!!
றீ    வதைபடுகிறது
தமிழினம்
சூர சம்காரம்

மிதக்கிறது
அடைமழையில்
ஊழல் இந்தியா

கோடி புண்ணியம்
கோபுர தரிசனம்
இடிதாங்கி

சிக்குண்டு கிடக்கிறது
சட்டத் திட்டங்கள்
வெண் நூல்

தப்பிவிடுகின்றன
நூலிழையில்
ஆரியக் குற்றங்கள்

கொள்ளை போனது
நகையும், பணமும்
உலகாத்தம்மன் ஆலயம்

மூழ்கிப் போனது
வெள்ளச் சேதத்தில்
உதவித் தொகை

நீச மொழி என்றவன் நக்கிப் பிழைக்கிறான்
காம லோக குருக்கள்

இல்லாமல் போனது அன்று
வன்கொடுமை தடுப்புச் சட்டம்
கிருஷ்ண லீலை

– _ புதுவை ஈழன்

ஒய் திஸ் கொலைவெறி?

சிவன் கடவுள்
கையில்
சூலாயுதம்!
காளி கடவுள்
கையில்
அரிவாள்!
ராமன் கடவுள்
கையில்
வில் அம்பு!
மக்களைக்
காக்கும் பணியில் கடவுள்கள்
என்றால்….
ஒய் திஸ் கொலைவெறி?

–  கல்மடுகன்

நூலகம்

அறிவுத்தாயின்
சுரபி!
அறியாமை இருள் விலக்கும் அறிவகம்!
பகுத்தறிவு
தேனீக்களின் கூடு!
நூற்றாண்டு பொக்கிஷங்களின்
ஒளிவிளக்கு!
முட்டாள்களின் முகவரியைத் திருத்தும்
புத்தக அலமாரிகளின் வரிசை
ஆலயத்துக்குள்
ஆயிரம்முறை நுழைந்து வந்தாலும்,
வெறும் திருநீறு நெற்றியோடுதான் திரும்புவாய்!
நூலகத்திற்குள்
நுழைந்து வரும் ஒவ்வொரு நொடியும்
போதிமரத்துப் புத்தனாய்
புதுப்பிக்கப்பட்டு வருவாய்!

– _ கி.இலஞ்சியன், திருச்செங்கோடு