நம்பிக்கை ஏற்பட்ட பிறகே அதிகாரப் பங்களிப்பு என்ற சரத் பொன்சேகாவின் அறிவிப்பு குறித்து? – சா.கோவிந்தசாமி, ஆவூர்
யாருக்கு நம்பிக்கை? நரிக்கு ஆட்டின்மீதா? புலியின் கூட்டத்தின் நம்பிக்கை புள்ளிமான்கள் மீதா? எவ்வளவு ஏமாற்று வேலை – அவர்களை குடிமக்களாக இலங்கை சிங்களவர்கள் நினைக்கத் தயாராக இல்லை என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டு.
எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட விலை உயர்வுதான் வழியா? – கு.கண்ணபிரான், சாயல்குடி
யாருக்காக வாதாடுகிறது மத்திய அரசு? முதலாளிகளுக்கா? மக்களுக்காகவா என்பதே பிரச்னை.
தனது சுய விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை முதல்வர் ஜெயலலிதா வீணாக்கலாமா? – எஸ்.பிரகாஷ்குமார், ஈக்காட்டுத்தாங்கல்
உரிய நேரத்தில் மக்கள் மன்றத்தில் பரிசு கிடைக்கும் இதற்கு. அதுவும் மக்கள் நலப்பணியாளர் 13 ஆயிரம் பேரின் வயிற்றெரிச்சலோடு!
தமிழக முழுதும் ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ய கோடிக்கணக்கான தொகை ஒதுக்கப்படுவது பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி எனக் கூறலாமா? – ம.சக்திவேல், கரூர்
அல்வா சாப்பிட்டது போல அல்லவா அவர்களுக்கு இருக்கும்?
ஆ.ராசா, சிதம்பரம் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசும் சு.சாமி வகையறாக்கள் நாட்டையே தலைகுனிய வைக்கும் அய்.பி.எல். கிரிக்கெட் ஊழலைப் பற்றி வாய் திறக்காதது ஏன்? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
அதில் பங்கு கிடைக்கக் கூடும்! – யார் கண்டார்கள்? பார்ப்பான் குடுமி சும்மா ஆடுமா?
தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள் என்று கூறும் முதல்வர் அவர்கள் என்றாவது எதிர்க்கட்சித் தலைவர்களை கலந்து ஆலோசித்தது உண்டா? – சா.கோவேந்தன், மதுரை
எதிர்க்கட்சியா? அப்படி ஒன்று இருக்கிற நினைப்பே அவருக்கு இருப்பதில்லையே! சரியான பக்கவாத்தியங்கள் இருக்கின்றனவே!
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு அளித்தது சரியா? – வீ.சங்கரன், நாகை
தவறான அணுகுமுறை. கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொறிந்துகொள்ளும் வேலை!
ஆதீன சொத்துக்களை அபகரித்த ரௌடிகளை விரட்டியடிப்பேன் என்கிறாரே நித்தியானந்தா? மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நித்தியானந்தா என்ற ஒழுக்கக் கேடான சாமியார் தமிழகத்தில் இப்படி துள்ளிக் குதிக்க தமிழக அரசின் ஆதரவு காரணமா? – தா.செல்வகுமார், ஆளூர்
உண்மை ஒரு நாள் வெளியாகும்! ஊருக்குப் பல விஷயங்கள் புலனாகும்!
பெண்கள் வெகு எளிதில் ஆன்மிக நம்பிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, பல வழிகளில் ஏமாற்றப்படக் காரணம் என்ன? – கு.தமிழ்ச்செல்வி, வேலூர்
எடைபோடத் தவறி, ஏமாறுவதைப்பற்றி கவலைப்படாதவர்களாக இருப்பது வேதனை!