பச்சைப் பட்டுடன் வைகை ஆற்றில் இறங்கினார் ஸ்ரீ கள்ளழகர் – செய்தி
பொம்மைக்கு எவ்வளவு மரியாதையை கொடுத்து எழுதுகிறார்கள் இந்த ஊடகங்கள்…. வடலூர் வள்ளலார் சொன்னார். இந்தத் திருவிழாக்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லுகிற பொழுது நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா நவின்ற கலைச் சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே
இவிங்க பண்ணுற அட்டூழியத்த பார்த்தா விளையாட்டு பிள்ளைகள் கூட இப்படி பொம்மைக்கு பட்டு உடுத்தி விளையாடாது….. இதற்கு முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகின்றன ஊடங்கங்கள்…வெட்கக்கேடு!
– பரணீதரன் கலியபெருமாள் மே 7, 2012
கணவனை இழந்து வறுமையில் தவிக்கும் ஒரு சகோதரிக்கு கோவில் சன்னிதானத்தில் இருக்கும் கடைகளில் ஒன்றை ஏலம் எடுக்க சென்று இருந்தோம். ‘பெண்களுக்கு எல்லாம் கோவில் கடைகளை கொடுக்க கூடாது’ என்றார் அந்த அர்ச்சகர். கோபத்தில் ‘உங்க வேலைய கொடுத்துடுங்க அந்த அக்காக்கு’ என்றேன். “பொம்மனாட்டி எல்லாம் அர்ச்சகர் ஆக முடியாது..தீட்டு” என்றார் அந்த கிழவர். ஒரு பெண்ணின் பத்து மாத தீட்டில் பிறந்த ஆண் அர்ச்சகராக இருக்கும் பொழுது ஏன் ஒரு பெண் இருக்க கூடாது என்று கேட்டுவிட்டு வெளியேறினேன். அர்ச்சனை தொடர்ந்தது வானதிக்கு!!
– உமா வானதி மே 24, 2012 மதியம் 1:39 மணி
குடும்ப பெண்கள் கோவிலுக்குள் தடை
எது எனில் மாத விலக்காம்…
குமரனை பெற்ற பார்வதிக்கு மட்டும்
அதில் விதி விலக்காம்!!
எவன்டா கண்டுபிடிச்சது இந்த ரூல்ஸ் எல்லாம்?
– சித்தன் கோயம்புத்தூர் மே 24, 2012 மாலை 3:47 மணி
சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்று தங்கள் சாதி இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வன்னியர் சங்கம் (காடுவெட்டி குரு), கொங்கு வேளாளர் பேரவை (பி.ஆனந்த்) பிராமணர் சங்கம் (நாராயணன்) ஆகியோர் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.
நீங்களெல்லாம் முதலில் டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து ரிசல்ட்டைக் காட்டுங்க. அப்புறமா சாதிக் கலப்புக்கு எதிராகப் பேசுங்க. ரெடியா?
– – கோவி.லெனின் மே 25, 2012 பகல் 11:41 மணி
கேள்விகள் அனைத்திற்கும்
வேதங்களையும் மந்திரங்களையுமே
பதிலாய்த் தருகிறீர்கள்.
அதனால் உங்களுக்கும் யாருக்கும் எப்போதும் எதுவும் புரிவதில்லை.
பணக்காரர்களுக்கும் அதிகாரமுடையோர்க்கும்
கடவுளைக் கூட்டிக் கொடுக்குறீர்கள்.
கடவுளுக்கு வெகு அருகில் நிற்பதால்
பெருமை கொள்ளும் என் நண்பர்களே,
உங்களை விட ஒரு விபச்சாரி புனிதமானவளாய் இருக்கிறாள்.
– டான் அசோக் மே 6, 2012 இரவு 11:55 மணி
பொற்கால ஆடசியில்
இருட்டில் படித்து…
வெற்றியை ஈட்டிய
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும்
அன்பு வாழ்த்துக்கள்…
– மணி வர்மா மே 22, 2012 இரவு 8:27 மணி
வறுமை தாங்காமே தற்கொலை பண்ணிக்க போனியே? உசுரோட வந்து நிக்குறே?
உசுரோட இருக்குறதுக்கும் வறுமைதாங்க காரணம். பெட்ரோல் வாங்க முடியலை
– யுவகிருஷ்ணா மே 25, 2012 பகல் 11:15 மணி
ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?
– ஆரியர் பகைவர் அசுரர் திராவிடர் மே 10, 2012
ஜெயலலிதாவின் ஓராண்டு தேர்வு முடிவுகள்.!
– Surya Born To Win மே 23, 2012 இரவு 11:00 மணி
again 7.50 rupees..
WOW….. இந்தியா ஒளிர்கிறது!!!! இந்தியா எரிகிறது!!!
– வசந்தன் மோகனவேல்
மே 23, 2012 மாலை 6:13 மணி