Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியாரை அறிவோமா?

1.  “குளத்திலும் கிணற்றிலேயும் பார்ப்பானும் பறையனும் சூத்திரனும் ஒன்றாகத் தண்ணீர் எடுக்கக் கூடாது. கோயிலுக்குள் போகக் கூடாது; மேல்சாதிக்காரனுக்குத்  தனிக்குளம் கட்டித்தரவேண்டும் என்பதுதான் காந்தியின் திட்டம்.  எனக்குத் தெரியும்.  யாராவது இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்.  சும்மா இன்றைக்குச் சொல்வார்கள் காந்தி மகான் காட்டிய வழி, மகாத்மாவின் சேவை என்றெல்லாம். அது வெறும் புரட்டு – இப்படிப் பெரியார் எந்த ஊர்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்?

(அ) மார்த்தாண்டம்,இரணியல் (ஆ) நெல்லை, கன்னியாகுமரி (இ) மதுரை, கொட்டாம்பட்டி                             (ஈ) விருதுநகர், அருப்புக்கோட்டை

2.    தலைமையில்லாமல் போராட்டம் நின்று விடும் நிலை ஏற்படவே பெரியர் ஈ.வெ.ரா வந்து போராட்டத்தை நடத்தவேண்டும் என்று கோரி அவருக்கு ஒரு கடிதத்தை இரு தலைவர்கள் கையேழுத்திட்டு அனுப்பினார்கள்.  அத்தலைவர்கள் யார்?

(அ) பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் (ஆ) டி.கே.மாதவன், வக்கீல் மாதவன்                (இ) ஏ. கே. பிள்ளை, வேலாயுதமேனன் (ஈ) கேளப்பன், திருமதி டி.கே.மாதவன்

3.    வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு ஜார்ஜ் ஜோசப் தலைமை தாங்கக் கூடாது என்று காந்தியார் எப்பத்திரிகையில் எழுதினார்?

(அ) ஹிந்து    (ஆ) வெஸ்ட் கோஸ்ட் ஸ்பெக்டேட்டர்  (இ) யங் இந்தியா   
(ஈ) நியூ இந்தியா

4.    காங்கிரஸ் கமிட்டி சத்தியாக்கிரகத்தில் பங்கேற்கக் கூடாது என்றும் ஹிந்து அல்லாத மற்றவரும் அவ்வாறே பங்கேற்கக் கூடாது என்றும் காந்தியார் கூறியதைக் கண்டித்து 24.5.1924 அன்று எழுதிய கேரளப் பத்திரிகை எது?

(அ) மலையாள மனோரமா (ஆ) ஸ்ரீ வாழும்கோடு (இ) பௌரன் (ஈ) மலையாளி

5.    பார்ப்பன மாணவர்க்கும் பார்ப்பனரல்லா தாராகிய மாணவர்க்கும் தனித்தனி இடங்களில் உணவு அளிப்பதை எதிர்த்துத் தோன்றிய குமுறல் காந்தியடிகளிடம் சென்ற போது அவர் ஒரே பந்தியில் சாப்பிடலாம் என்றும், ஆனால் சமையற்காரர் பார்ப்பனராகவே இருக்க வேண்டும் என்றும் ஓர் ஏற்பாட்டை அறிவித்தார்.  இந்த ஏற்பாட்டைப் பார்ப்பனர்களைச் சமையற்காரர்களாக நியமிக்க வேண்டும் என்ற காந்தியாரின் முடிவை எதிர்த்ததுடன் குருகுலம் நடத்துவதற்காகக் காங்கிரசிடமிருந்து  பெற்ற பணத்தை வ.வே.சு. அய்யர் திருப்பித் தரவேண்டும் என்றும் அறிவித்தவர் யார்?

(அ) திரு.வி.க.  (ஆ) பி.வரதராஜுலு நாயுடு (இ) தங்கப் பெருமாள் பிள்ளை  (ஈ) இராசகோபாலாச்சாரியார்

6.    காங்கிரசிலே நாம் வந்து இருக்கிறோம்.  நமக்கு விரோதமாக ஒரு கூட்டம் ஜஸ்டீஸ்கட்சி என்று இருந்து வருகிறது.  அது பார்ப்பனரல்லாதார் நன்மைக்காகப் பாடுபடுகிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள்.  இந்த நிலையிலே இதிலே நம்முடைய பார்ப்பனரல்லாதாருடைய நிலை என்ன, கடமை  என்ன, உரிமை என்ன என்பதைப்பற்றிப் பேசி முடிக்க வேண்டும்.  அதற்காகத் தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்று பெரியார் ஈ.வெ.ரா. கூறியபோது இதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை.  நமக்கு வேண்டியது எல்லாம் தேசம் சுதந்திரம் பெற வேண்டியது என்று கூறியவர் யார்?

(அ) டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு (ஆ) திரு வி.கலியாணசுந்தரனார் (இ) எஸ்.இராமநாதன் (ஈ) சிங்காரவேலு செட்டியார்

7.    மாநாட்டில் பெசண்ட் அம்மையாரையும் சீனிவாச சாஸ்திரியையும் சேர்த்துக் கொண்டு அவர்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்ற கருத்து எழுப்பப்பட்டபோது அவர்கள் இருவரையும் சேர்த்துக் கொள்வது என்றால் ஏன் நீதிக்கட்சித் தலைவர் தியாகராயரையும் அழைத்துப் பேசக் கூடாது என்று குறிப்பிட்டவர் யார்?

(அ) டாக்டர் வரதராஜுலு நாயுடு (ஆ) கோவை அய்யாமுத்து (இ) எஸ். இராமநாதன்  (ஈ) தஞ்சாவூர் வெங்கட கிருஷ்ணபிள்ளை

8.    தமிழ் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் என்ற கரு வளர்வதற்கான மூல விதையைக் கரத்தினில் ஏந்தி மண்ணில் விதைத்துத் தண்ணீர் வார்த்து அது முளைவிட்டு இலைவிட்டு கிளைவிட்டு ஆணிவேர் சல்லிவேர் பரப்பி ஆலவிருட்சமாய் விழுதுகள் இறக்கித் தழைத்துச் செழித்துக் கொழுத்துப் படர ஒரே காரணகர்த்தா தந்தை பெரியார் என்று எழுத்தோவியம் வடித்தவர்

(அ) திரு.வி.க.        (ஆ) பாரதிதாசன்    (இ)சாமி.சிதம்பரனார்    (ஈ)கவிஞர் கருணானந்தம்

9.    தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சிச் செயலாளராக இருந்த ஆண்டு எது?
(அ) 1920 (ஆ) 1925 (இ) 1927 (ஈ) 1929

10.    தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகப் பெரும்பான்மை யோரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பெரியார் மீது நம்பிக்கையில்லை என்னும் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் யார்?

(அ) இராஜகோபாலாச்சாரியார்    (ஆ)  சீனிவாசய்யங்கார் (இ) வ.வே.சு.அய்யர்    (ஈ) விஜயராகவாச்சாரியார்