பரமக்குடி பொன்னையாபுரத்தைச்சேர்ந்த பீட்டர்ஜான் என்ற இளைஞர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். மின்பணியாளராக இருக்கும் இவருக்கு புதிய கண்டிபிடிப்புகளைச் செய்வதில் ஆர்வம் அதிகமாம்.ஒரு விசிறியை வைத்து காற்றின் மூலம் அதனைச் சுழற்றி மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்பேசிக்கு மின்சாரம் செலுத்தும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இந்தக் கருவியைப் பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, இந்த செல்பேசிக் கருவில் உள்ள விசிறியை சுழற்றும்.அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுழற்றும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதனுடன் இணைத்துள்ள செல்பேசிக்கு மின்சாரம் செல்கிறது. பேருந்து, ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள்களில் நெடுந்தூரம் பயணம் செய்வோருக்கு இக்கருவி மிகுந்த பயனளிக்கும்.