பாருய்யா பார்ப்பன பற்று எப்படி என்று….?
இந்த உ.வே.சா யோக்கியதை என்ன என்று இதோ பாருங்கள்…..
உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகளை சென்னை ஆனந்தபோதினி அச்சகத்தில் அச்சடிப்பது வழக்கம். இதன் உரிமையாளர் முனிசாமி முதலியார். நிர்வாகப் பொறுப்பு – ஜீவா என்று புனை பெயரில் அழைக்கப்பட்ட நாரண துரைக்கண்ணனிடம் இருந்தது. நாரண துரைக்கண்ணன் கள் இறக்கும் மரபில் பிறந்தாலும் தமிழை விரும்பிக் கற்றார். மறைமலை அடிகள், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், திரு.வி.க. சீனி.வேங்கடசாமி, பா.வே.மாணிக்கம், கா.நமச்சிவாயம் போன்ற அறிஞர் பெருமக்களிடம் உறவாடி தமிழ் பயின்றார்.
உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகள் அன்றும் வழக்கம்போல் ஆனந்த போதினி அச்சகத்திற்கு அச்சுக் கோர்க்கப் போனது. அதில் இருந்த பாடலில் பிழைகண்ட நாரண துரைக்கண்ணன் அதைத்திருத்தியே அச்சடித்தார். தவறை காலதாமமாக உணர்ந்த உ.வே.சா. தன் உதவியாளர் இராசகோபால் அய்யங்காரை விரைந்து அனுப்பி, பிழை திருத்தி அச்சேற்றும்படி அனுப்பி வைத்தார். அதற்கு முன்பே படிகள் அச்சாகி விட்டன. ஆனால் பிழை திருத்தப்பட்டது கண்டு வியந்து போய் உதவியாளர் அய்யங்கார், நாரண துரைக்கண்ணனின் தமிழறிவை வெகுவாகப் பாராட்டியதுடன், அவர் சம்மதித்தால், உ.வே.சா.விடம் மேலும் தமிழ்ப்பாடம் பயின்று, அறிவை பட்டை தீட்ட ஏற்பாடு செய்வதாய் சொல்லிச் சென்றார்.
அதற்கு உ.வே.சா. ஒப்புதல் தரவில்லை. அதற்கு உ.வே.சா. சொன்ன காரணம். நான் சூத்திரனுக்கு தமிழ் கற்பிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார். ஆனால் அவர் தமிழ் கற்றது மட்டும் கும்பகோணத்தில் இருந்த திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தான்.
– பரணீதரன் கலியபெருமாள்