கேள்வி : தந்திரத்திலும், வஞ்சகத்திலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது (3.11.1929, .குடிஅரசு பக்கம் 8,9)என்று பெரியார் சொல்லியிருக்கிறார். இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால், இன்றைய அரசியல்வாதிகளைப்பற்றி என்ன சொல்லியிருப்பார்? – அ.விசயபாண்டியன், விருதுநகர்
பதில் : அந்த 1929 குடிஅரசு கருத்தை மேலும் வலியுறுத்திப் போராட களம் அமைத்திருப்பார்கள்.
கேள்வி : மத்தியில் வேறு அரசு அமைந்திருந்தால் மாவீரன் பிரபாகரன் நினைத்தபடி தமிழீழம் அமைந்திருக்குமா? – கே.ஆர். இரவீந்திரன், சென்னை
பதில் : இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழைய பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. எதிர்க்கட்சி அரசுகள் – பா.ஜ.க. மற்றும் தேசிய முன்னணி உட்பட பல ஆட்சிகள் வந்தனவே எந்த ஆட்சி தமிழீழம் மலர உதவியது! வாக்கு வங்கிக்கு அவ்வப்போது ஏமாற்ற – அப்பாவித் தமிழர்களை ஏமாற்றப் பயன்படலாம் அவ்வளவே!
கேள்வி : ஆன்மீகவாதி வாரியாரை, பகுத்தறிவுவாதி பெரியார் சந்தித்ததுண்டா? – கோ.பிரியா, திருவள்ளூர்
பதில் : ஆன்மீகவாதி என்ற சொல்லே அர்த்தமற்ற ஒன்று. புராணப் பிரசங்கியான வாரியார் தந்தை பெரியார் அவர்களை, தொடர்வண்டிப் பயணத்தில் சந்தித்து வாழ்த்துச் சொன்னார் ஒரு முறை. மேடையில் பெரியார் என்ற நச்சாறு ஓடுகிறது என்று பேசிய வாரியார்?
கேள்வி : விண்வெளிக்கு ஏவுகணைகளை அனுப்பும் சில விஞ்ஞானிகள் பகுத்தறிவு மனப்பான்மை இல்லாமல் இருப்பது ஏன்? – வெங்கட. இராசா, ம. பொடையூர்
பதில் : இந்த இதழ் உண்மையின் தலையங்கத்தைப் படியுங்கள் கேள்வி : ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்த நாடு, ஆரியர்களின் அடாவடிகளுக்கு அடிமைப்பட்டதுபோல் இன்றுள்ள நிலைமைகள் இருக்கின்றனவே? – சே. துரை, இளையான்குடி
கேள்வி : அய்யா அன்றே சொன்னார்; இன்று காண்கிறோம். எவ்வளவு தொலைநோக்கு அய்யாவுக்கு. கேள்வி : மழை, வெயில் என்று பாராமல் நேரடியாக களத்தில் இறங்கிப் பணி செய்து தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயக் கூலியாளர்களின் எண்ணிக்கையைவிட, அந்த உற்பத்தியை வாங்கி விற்கும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை மட்டும் இருமடங்கு அதிகமாக இருக்கக் காரணம் என்ன? – த. சுரேஷ், நாகர்கோவில்
பதில் : பொருளாதார முறை சமதர்ம அரசு, _ எல்லாவகையிலும் _ அமைந்தால் அக்கொடுமை இடைத் தரகர் கொள்ளை, தனிமனித ஏகபோகம் எல்லாம் ஒழியும் உற்பத்தியாளர் நேரே பயன்பெற வழி ஏற்படும்!
கேள்வி : உயர் நீதிமன்றம் செல்லாமலேயே ஒரு வழக்கை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாமா? இதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமுண்டா? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : சில அடிப்படை உரிமைகள்பற்றியவை நேரே தாக்கல் செய்யலாம்! இந்திய அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது!
கேள்வி : 2009 தேர்தலுக்குப் பிறகு, ஈழத் தமிழர்களைப்பற்றி அ.தி.மு.க தலைவி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே? – இயற்கைதாசன், கன்னியாகுமரி
பதில் : மீண்டும் அம்மா பேசுவார், ஏப்ரல் 1ஆம் தேதியும் தேர்தலும் இணைந்தே (அதேமாதத்தில் தேர்தல் நடக்க வாய்ப்புண்டு) _ என்பதால் பேசுவார்கள். இங்குள்ள தமிழீழம் பேசிடுவோர் நம்புவர்! என்னே வேடிக்கை!
கேள்வி : சூத்திரன் என்றால் இயக்குகிறவன் என்று பொருள், சூத்திரதாரி என்ற வார்த்தையின் மரூஉ சூத்திரன் என்பதாக அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலில் கண்ணதாசன் கூறியுள்ளாரே! அதுபற்றி? – பாவலர் அறிவரசன், திருலோக்கி
பதில் : மனுதர்மம் படிக்காத கண்ணதாசன் சங்கரமடத்தின் தூண்டுதலில் கடைசிக் காலத்தில் இப்படி எழுதி அவப்பெயர் தேடிக்கொண்டார். சூத்திரனுக்குப் பொருள் மனுதர்மத்தில் உள்ளது ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுவதல்ல ஒருவரின் தர்மத்திற்கு ஆதாரம் தேடுவது இது!
கேள்வி : தமிழரின் அவல நிலையை மாற்ற இலங்கை சென்ற எஸ்.எம். கிருஷ்ணா அங்குள்ள தமிழரமைப்புகளின் தலைவர்களைச் சந்திக்காமல் திரும்பி வந்தது எதனைக் காட்டுகிறது? – புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி
பதில் : இன்றைய மத்திய அரசுக்கும் அதன் அமைச்சர்களுக்கும் எவ்வளவு தூரம் ஈழத் தமிழர் நலத்தில் ஈடுபாடு, அக்கறை உள்ளது என்பதைக் காட்டுகிறது.