Skip to content
- இந்திய நாடாளுமன்றத்தின் 60ஆவது ஆண்டு விழாவையொட்டி சிறப்புக் கூட்டம் மே 13 அன்று நடைபெற்றது.
- நேபாளத்தில் மலைமீது மே14இல் தனியார் விமானம் மோதி விழுந்ததில் 13 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2011 பிப்ரவிரி 2இல் கைது செய்யப்பட்ட ஆ.ராசா மே 15 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
- பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக பிரான்கோய்ஸ் ஹாலண்ட் மே 15 அன்று பொறுப்பேற்றார்.
- சென்னையில் மே 17 அன்று வெயிலின் உக்கிரம் கடுமையாக 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது.
- மே 18 அன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.592 உயர்ந்தது. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்ததால் இந்த உயர்வு என்று கூறப்படுகிறது.
- உலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை மே 18இல் ஜப்பானைச் சேர்ந்த 73 வயது பெண் தமேய் வடனாபி அடைந்து சாதனை படைத்தார்.
- மே 23 அன்று இந்தியாவில் முதல்முறையாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டது. இதனை பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி குறிப்பிட்டார்.