இந்தியர் ஒருவரின் கடன் ரூ.33,000

ஜூன் 01-15

மார்ச் 2012  கணக்கெடுப்புப்படி இந்தியர்களாகிய(?) நம் ஒவ்வொரு வரின் கடன் சுமை எவ்வளவு தெரியுமா? 33,000 ஆயிரம் ரூபாய்தான். இது போன ஆண்டை விட அதிகம். போன ஆண்டு 26,600 ரூபாயாக இருந்து இப்ப 33,000 ரூபாய் ஆகியிருக்கிறது. விலைவாசி யெல்லாம் ஏறும்போது கடன் ஏறக்கூடாதா என்ன?  இந்தப் புள்ளி விவரத்தைச் சொல்லியிருப்பது மத்திய நிதி அமைச்சகம். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அரசு வாங்கும் கடன் அளவு அதிகரித்ததே இதற்கு காரணம்.

அரசும்,ஆளும் அரசியல்வாதிகளும்,அரசு நிர்வாகிகளும் தங்களின் அனாவசிய செலவுகளைக் குறைத்தாலே இவ்வளவு கடன் சுமை ஏற்பட வாய்ப்பில்லை. எனக்கென்ன என்ற மனநிலையில் மக்கள் பணத்தைச் செலவு செய்வதால்தானே இத்தனைக் கடன் சுமை ஏறிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *