ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழக விடுதியில் கோழி, ஆட்டுக்கறி உணவு வழங்கப்படுகிறது. ஆனால், மாட்டுக்கறி மட்டும் வழங்காதது ஏன் என்பது அங்குள்ள மாணவர்களின் கேள்வி. அவர்களே மாட்டுக்கறி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். தெலுங்கானா மாணவர் அமைப்பு, எஸ்.எப்.அய்,பி.டி.எஸ்.யு ஆகிய மாணவர் அமைப்புகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் இந்துத்துவ மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட எழுத்தாளர் மீனா கந்தசாமி, இது குறித்து டுவிட்டரில் எழுதியுள்ளார். இவரின் கருத்துகளை எதிர்கொள்ளமுடியாத இந்துத்துவாக்கள் இவரை வசை பாடியுள்ளனர். உயிரோடு எரித்துக் கொல்லவேண்டும் (மோடி வழியோ?), வன்புணர்ச்சி செய்யவேண்டும் என்று அநாகரிகமாக சித்தார்த் சங்கர் என்ற பெயரில் மிரட்டல் விட்டுள்ளார்கள். இப்போது இதனை அப்படியேஆதாரமாகக் காட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார் மீனா கந்தசாமி.