படம் சொல்லும் கதை

மே 16-31

இப்படத்தை பார்த்தவுடனே இவர்கள் தந்தையும் மகளும் என்று நீங்கள் கருதலாம். ஆனால், உண்மை என்ன தெரியுமா? இவர்கள் கணவன் -மனைவிகள். ஏமான் நாட்டில் இன்னும் தொடரும் குழந்தைத் திருமணக் கொடுமையை இப்படம் சொல்லுகிறது. ஹஜ்ஜா ஹஜ்ஜா மலைப்பகுதியில் வசிக்கும் டஹானி என்ற 6 வயதுச் சிறுமி தனது 25 வயதுக் கணவர் மஜீத்-உடன் (இடப்புறம்) நிற்கிறார். அவருடன் நின்றுகொண்டிருக்கும் இன்னொரு ஜோடி டஹானியின் தோழி காதாவும் அவரது கணவரும். ராய்டர்ஸ் செய்தியில் வெளியான இப்படத்தை ஸ்டீபன் சின்க்லர் என்ற ஒளிப்படப் பெண் பத்திரிகையாளர் எடுத்துள்ளார். உலக அளவில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திப் படங்களுக்கான போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த 2011ஆண்டில் 5,000 பத்திரிகை ஒளிப்படக்காரர்களின் ஒரு லட்சம் படங்கள்  பங்கேற்றன இப்போட்டி யில், சமகாலச் சிக்கல்கள் குறித்த செய்திக்கதைகள் பிரிவில் இப்படம் முதல் பரிசைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *