1) நல்ல வேளையாக நீங்கள் சட்டப்படிப்புப் படித்து வழக்கறிஞராக வராமல் போனீர்கள், வந்திருந்தால் வழக்கறிஞர்கள் பாடு திண்டாட்டமாய் இருந்திருக்கும் என்று பெரியாரிடம் கூறியவர் யார்?
அ) வ.உ.சிதம்பரனார் ஆ)சோமசுந்தர பாரதியார் இ) இராஜகோபாலாச்சாரியார் ஈ) சீனிவாச அய்யங்கார்
2) வைக்கம் சத்தியாக்கிரக ஆசிரமத்திற்கு வந்து நாராயணகுரு சில நாள் தங்கினார் என்றும், பல அறிவுரைகள் வழங்கினார் என்றும் `தேசாபிமானி பத்திரிகை எந்த நாளில் தலையங்கம் எழுதியது?
அ) 8.10.24 ஆ) 9.10.24 இ) 10.10.24 ஈ) 11.10.24
3) குருகுலத்திலிருந்து விடுமுறைக்கு வந்த ரெட்டியார் மகன் ஒரு நாள் உரையாடும் போது ரெட்டியாரிடம் காலைக் கூட்டத்தில் பார்ப்பன மாணவர்களும் மற்ற மாணவர்களும் தனித்தனியே பிரிந்து நிற்பார்கள் என்றும், இருசாராருக்கும் தனித்தனி உணவுப் பந்தி உண்டு என்றும், பார்ப்பன மாணவர்களுக்கு உயர்தரமான சாப்பாடு வழங்குவர் என்றும் கூறியபோது அதிர்ச்சி அடைந்த ஓமாந்தூரார் மகனிடம் உடனே யாரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்?
அ) வரதராஜுலு நாயுடு ஆ) திரு.வி.க.
இ) எஸ்.இராமநாதன் ஈ) ஈ.வெ.ராமசாமி
4) தஞ்சையில் 1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் மாநாடு நடந்தபோது பார்ப்பனரல்லாதார் பிரதிநிதிகள் தங்கியுள்ள இடத்தில் ஒரு கூட்டம் நடைபெறும் எனப் பெரியார் ஈ.வெ.ரா. அறிவித்தார். எதற்காக இக்கூட்டம் அவரால் கூட்டப்பட்டது?
அ) இந்திய விடுதலை குறித்து ஆராய
ஆ) மொழிச்சிக்கல் குறித்து முடிவு எடுக்க
இ) பார்ப்பனரல்லாதார் குறித்துப் பேச
ஈ) தேர்தல் குறித்து ஆய்வு நடத்திட
5) 1925 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாகாண மாநாடு தமிழ்நாட்டில் எந்த ஊரில் நடைபெற்றது?
அ) மதுரை ஆ) திருநெல்வேலி
இ) காஞ்சிபுரம் ஈ) சென்னை
6) தந்தை பெரியார் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற திருச்செங்கோடு கதர் அங்காடியில் பணியாற்றிய எழுத்தாளர்
அ) கல்கி ஆ) மறைமலையடிகள்
இ) ம.பொ.சி. ஈ) புதுமைப்பித்தன்
7) வைக்கத்தில் இந்திரா காந்தி, மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்ட வைக்கம் போராட்ட பொன்விழா நடைபெற்ற நாள் எது?
அ) 26.4.1970 ஆ) 26.4.1975 இ) 26.4.1980 ஈ) 26.4.1984
8) இந்தியாவுக்குப் பிரிட்டிஷார் செய்த கெடுதியைவிடப் பிராமணர்கள் செய்த கெடுதி குறைவானதல்ல- இது யார் கூற்று?
அ) காந்தி ஆ) விவேகானந்தர்
இ) காஞ்சி சங்கராச்சாரியார் ஈ) நேரு
9) காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து வந்த பெரியாரிடம், உங்களை விட ஜஸ்டீஸ் கட்சிக்காரர்கள் நூறு மடங்கு தேவலாம் என்று கூறியவர் யார்?
அ) டி.எம்.நாயர் ஆ) ராஜகோபாலாச்சாரியார்
இ) தியாகராயர் ஈ) வ.வே.சு.அய்யர்
10) குடிஅரசு ஏட்டினைத் தொடங்கிவைத்தவர் யார்?
அ) பெரியார் ஆ) திரு.வி.க.
இ) வ.உ.சி. ஈ) ஞானியார் அடிகள்
விடைகள்: விடைகள்:
1.இ, 2.ஈ, 3.ஈ, 4.இ, 5.இ, 6.அ, 7.ஆ, 8.அ, 9.ஆ, 10.ஈ
Leave a Reply