முகநூல் பேசுகிறது

மார்ச் 16-31

சசிகலாவின் தீவிர ஆதரவளாரான டிமிட்ரி இவ்நோஸ்கி வீட்டில் இன்று நடந்த ரெய்டில் வருமானத்திற்கு அதிகமாக நான்கு பாக்கெட் மெழுகுவர்த்திகள் மற்றும் 8 மணிநேரம் ஓடக்கூடிய அளவுக்கு இன்வேர்ட்டர் & UPS கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப்பற்றி அவர் கூறுகையில், இது சசிகலா ஆதரவாளரான என்னை முதல்வர் ஜெயாவின் பழிவாங்கும் நடவடிக்கை என்றார். இதை பற்றிய மேலும் பல செய்திகள் நாளை தினமலரில்..!!! –     மார்ச் 8, 2012 மாலை 5:45

5 மாநிலம்.: பிஜேபி ரெண்டு. காங்கிரஸ் ரெண்டு.
இன்னொண்ணுல ரெண்டுமே டெபாசிட் காலி.
# அப்பாடா ரொம்ப சந்தோசம்.. ரெண்டு பேரும் நீ பெருசு, இல்ல நான்தான் பெருசுன்னு சண்ட போடாமா இருப்பானுங்க…:)

கோகுல் G KGM மார்ச் 7, 2012 காலை 9:49

 

வீட்டுக்கு வீடு கூழ் வாங்கிக் குடித்ததால் நீவிர் இனி “ராகூழ் காந்தி” என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவாய்..  – பாஸ்கர் GN

பசுவோட உடம்பில் கோடானுகோடி தேவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்கிறார்களே!அப்போ அந்த பசுவுக்கு கோமாரி நோயோ அல்லது ஆந்ராக்ஸ் கிருமியோ தாக்கும் போது ஏன் அந்த தேவர்கள் அந்த கிருமிகளை அழிப்பதில்லை?லூயி பாஸ்டியரோட மருந்துதானே அந்த மாடுகளை காப்பாற்றுகிறது?எனில் அந்த தேவர்களை விட லூயி பாஸ்டியர் உயர்ந்தவரா?ஒரு வேளை மேற்படி நோய்களினால் அந்த பசுக்கள் சாக நேரிட்டால் அதன் உடலில் குடியிருக்கும் கோடானு கோடி தேவர்களும் செத்து மடிவார்களா?அல்லது இன்னொரு பசுவின் உடலில் புகுந்து கொள்வார்களா?

ராஜேஷ் தீனா மார்ச் 8, 2012 காலை 9:23

திருப்பதி ஏழுமலையான் கோயிலை சுற்றி கோடி செலவில் இரும்பு வேலி, தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்க (செய்தி)  இருட்டை தவிர்க்க விஞ்ஞானத்தின் விளக்குகள் புயல் மழை காற்றில் இருந்து காக்க கட்டடங்கள்  காசு எண்ணுவதற்கு இயந்திரங்கள்  கோயில் வளாகத்தை காவல் காக்க காமிரா   இப்படி தனக்கு தேவையானவற்றில் ஒன்றை கூட  உற்பத்தி செய்ய முடியாத ஒரு கல்லுக்கு பேர் கடவுளா? இதில வேற இரண்டு பொண்டாட்டி… கழிசடையல்லவா அது விஞ்ஞானத்தின் விளைவுகளை, வெற்றிகளை  அறுவடை செய்கிறது ஆன்மிக பக்த கேடி கூட்டம்………..

– பனங்காட்டு நரி மார்ச் 7, 2012 மதியம் 2:43

ரஜினி காந்த்:- பன்னீங்க தான் கூட்டமா வரும்… சிங்கம் சிங்களா தான் வரும்!!

 

“அதெல்லாம் இருக்கட்டும் கரண்ட் எப்போ வரும்”.
செ மா செ, மார்ச் 1, 2012 இரவு 9:54

 

 

1901ஆம் ஆண்டில் கல்வியின் நிலை என்ன?

பார்ப்பனர்கள் (தமிழ்நாடு) 73.6%
தெலுங்கு பார்ப்பனர்கள் 67.3%
நாயர்கள் 39.5% செட்டியார் 32.0%
இந்திய கிருத்துவர்கள் 16.2%
நாடார் 15.4%
பலிஜா நாயுடு, கவரை 14.3%
வேளாளர் 6.9%
கம்மா 4.8%
காப்பி, ரெட்டி 3.8%
வெலமா 3.5%

(Census of India, Madras 1921 XIII Part I, 128-129)

இந்த புள்ளி விவரங்களை அறிந்தால்தான் இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதாரின் வளர்ச்சிக்கு எந்த இயக்கம் அடிப்படை? எந்தத் தலைவர்கள் காரணம்? என்பதை ஒழுங்காக அறிய முடியும்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறி பார்ப்பனர்களுக்குச் சேவை செய்ய துடிக்கும் பேர்வழிகளின் அடையாளத்தையும் புரிந்து கொள்ள முடியும்.  ஈரோட்டு பூகம்பம், மார்ச் 7, 2012 காலை 7:39

திராவிட மாயை பற்றி மருத்துவர் அய்யா பேச ஆரம்பிச்சிட்டாரு. அந்த கர்மம் புடிச்ச மாயை தயவில் எம்.பி சீட்டு, எம்.எல்.ஏ. சீட்டு எல்லாம் ஜெயிச்சி, மகனையும் அதே மாயை தயவில் எலக்சனில் நிக்க வைக்காமலேயே எம்.பி பதவி வாங்கி, மந்திரியும் ஆக்கி தொலைச்சதையெல்லாம் இப்ப நினைக்கப்படாது. திராவிடம்னு லேபிள் ஒட்டியிருக்கிற தேசிய முற்போக்கு கட்சிகளெல்லாம் மருத்துவர் கட்சியோட ஓட்டு வங்கியில் ஓட்டையைப் போடும்போது, அந்த மாயையை இனியும் விட்டு வைக்க முடியுமா? நீங்க பேசுங்க அய்யா.. நாங்க கேட்குறோம். வரும் எம்.பி. தேர்தல் வரைக்கும்.. – கோவி.லெனின் மார்ச் 2, 2012 காலை 10:34

 

‘ஜெயா’ தனி விமானத்தில்..(!?) சென்று ….. ஸ்ரீ ரங்கநாதரை சந்தித்தார்! ……… மனமுருகி……வேண்டிக்கொண்டார்!

300 பேர்களுக்கு……. பட்டு வேட்டி…… சட்டை ..தந்தார்! அப்படியே ..மிஸ்டர். ரங்கனிடம் ..தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கேட்டு வேண்டிக்கொண்டாரா ….தெரியவில்லையே !

குறிப்பு : ‘தானே’ புயலால் பாதிக்க ……பட்டவர்களுக்கு !

ஒரே …..ஒரு தகர டப்பா வை கூட தர வக்கில்லை ! இதில் ..சவுண்டிப்பயல்களுக்கு… மட்டும் பட்டு தானமா ?              –  பெரியார் தடி மார்ச் 8, 2012 இரவு 7:48

 

வந்தாரை வாழ வைப்பது
சூரிய வம்சம்!!
இருப்போரை நோக வைப்பது
ஆரிய வம்சம்!!!

அன்வர் சாதிக் மார்ச் 8, 2012 இரவு 11:15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *