Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பாராட்டுகிறார் முன்னாள் துணைவேந்தர்

பிப்ரவரி 16-_-29 நாளிட்ட உண்மை இதழ் மிக அருமையாக உருவாக்கப் பெற்றிருக்கிறது. பிளேட்டோவின் கருத்துகளைப் பொருத்தமான இடங்களில் அவர் படத்துடன் வெளியிட்டுள்ளமை, அபிமன்யு, பிரகலாதன் கதையை அறிவியலா எனும் தலைப்பிலான கட்டுரை, வன்முறை தவிர்க்கும் வழிமுறைகள் என்ற பொருளடர்ந்த கட்டுரை, நெஞ்சுவலி இதயவலியா? என்ற மருத்துவக் கட்டுரையும் இன்ன பிறவும் மிகப் பொறுப்புடனும், கவனத்துடனும் எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டுகள். ஜோதிடத்தை இகழும் நாலடியார் எனும் குறிப்பை எடுத்துக் கொடுத்தமைக்குப் பாராட்டு. பொதுவாக சமண சமயத்தைச் சார்ந்த எந்த நூலும் ஜோதிடத்தையும், சகுனத்தையும் ஏற்பதில்லை.

மீண்டும் பாராட்டுடன்,
க.ப.அறவாணன்