சினிமாவில் பெண்களுக்கென சில டிபார்ட்மெண்ட்ஸ் இருக்கு. அதை விட்டுட்டு டென்ஷன் நிறைந்த டைரக்?ஷனுக்கு ஏன் வரணும்? என்று ஒரு கேள்வியை அய்ஸ்வர்யா ஆர்.தனுஷ் (இயக்குநர், 3 திரைபடம்) அவர்களிடம் கேட்டுள்ளது குமுதம். பெண்களுக்கென இருக்கும் அந்த சில டிபார்ட்மெண்ட்ஸ் என்ன? கவர்ச்சி மட்டும் காட்டுவதா? அழுது கொண்டு நடிப்பதா? திரைப்படம் எடுக்க பெண்கள் ஏன் வரணும்? என்று கேட்கிற கொழுப்பை இவர்களுக்கு யார் தந்தது? முன்பு திரைப்பட ஒப்பனைக் கலைஞராக பானு அவர்கள் வந்த போது பெண்கள் ஏன் ஒப்பனை செய்ய வருகிறார்கள் என்று தமிழ் சினிமா ஆணாதிக்கவாதிகள் புலம்பினார்கள். டி.பி.ராஜலட்சுமி தொடங்கி பானுமதி, ஸ்ரீ ப்ரியா, ஜெயதேவி என தமிழ் சினிமாவில் இயக்குநராக முத்திரை பதித்த பெண்கள் பலர் உண்டு என்பது குமுதங்களுக்குத் தெரியாதா? அல்லது தனது அட்டைப்படத்துக்கும், கவர்ச்சிப் பக்கங்களுக்கும் போஸ் கொடுக்க மட்டும் பெண்கள் போதும் என்று குமுதம் கருதுகிறதா?