1) ஈரோட்டில் தற்போது இயங்கி வரும் வெங்கட்ட நாயக்கர் தர்ம வைத்திய சாலையைத் தொடங்கி நடத்தியவர்
அ) சின்னத்தாய் அம்மாள் ஆ) வெங்கட்ட நாயக்கர் இ) கிருஷ்ணசாமி நாயக்கர் ஈ) ஈ.வெ. ராமசாமி நாயக்கர்
2) “அரசியல் மணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட மணியம்மையாரின் இயற்பெயர் என்ன?
அ) சாந்திமதி ஆ) காந்திமதி இ) பானுமதி ஈ) சந்திரமதி
3) சென்னையில் அன்னை மணியம்மையார் தலைமையில் ராவணலீலா நடந்த நாள் எது?
அ) 10.8.1971 ஆ) 5.6.1944 இ) 6.8.1998 ஈ) 25.12.1974
4) பிராமணாள் ஹோட்டல் பெயர்ப் பலகையை ஏன் அழிக்க வேண்டும் என்பதற்கான அய்யாவின் பதில் . . . . . . . . .
அ) பிராமணாள் ஹோட்டல் என்பது தமிழ் அன்று என்பதால் ஆ) பிராமணர்கள் தமக்குப் பிடிக்காதவர்கள் என்பதால் இ) தெருவில் உள்ள ஒரு வீட்டில் இது பதிவிரதை வீடு என்று எழுதினால் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் யார் என்பதால் ஈ) தமிழகத்தில் பிராமணர்கள் கை ஓங்கக் கூடாது என்பதால்
5) அன்னை மணியம்மையார் செயலாளராக வந்தபோது அவர் இயக்கத்திற்குச் செய்த பெருந்தொண்டு யாது?
அ) புத்தக விற்பனை செய்தார் ஆ) பெரியாரைப் பேணிக் காத்தார் இ) பிரச்சாரப் பயணம் செய்தார் ஈ) “விடுதலை நிர்வாகம் செய்தார்
6) “வைக்கம் சத்தியாக்கிரகத்தைக் கைவிடுங்கள். அதை நடத்தாதீர்கள். தேவையில்லை. அதற்குப் பதிலாக மனமாற்றத்தை உண்டாக்க வேண்டும். மற்ற மதக்காரர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறிப் போராட்டத்திற்கு எதிராகச் செயல் பட்டவர் யார்?
அ) காந்தி ஆ) காமராசர் இ) நேரு ஈ) சுபாஷ்சந்திரபோஸ்
7) முழுவதும் ஆங்கிலேயர்களிடமிருந்த மருத்துவத் துறையை தமிழர்களைக் கொண்டு மாற்றியவரும், மருத்துவப் படிப்புக்குச் சமஸ்கிருதம் படித்திருக்கத் தேவையில்லை என்றும், பெரியார் கருத்தை ஆணையாக பிறப்பித்தவருமான நீதிக்கட்சித் தலைவர் யார்?
அ) பனகல் அரசர் ஆ) பொப்பிலி அரசர் இ) ஏ. பி. பாத்ரோ ஈ) ஏ. சுப்புராயலு (ரெட்டி)
8) சுயமரியாதை இயக்கத்தைக் கண்டித்து 1929இல் சைவப் பெரியார் மாநாடு, சைவ சமரச மாநாடு, சைவ சித்தாந்த மாநாடு, வருணாசிரம மாநாடு, ஆஸ்திக சங்க மாநாடு எனச் சிலரே பல பெயர்களில் மாநாடு நடத்தியது எந்த ஊரில்?
அ) திருப்பாதிரிப் புலியூர் ஆ) திருநெல்வேலி இ) கல்லிடைக் குறிச்சி ஈ) நாகபட்டினம்
9) இங்கே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரியார் சொல்லாத வாக்கியம் எது?
அ) உடைகளில் ஆண்-பெண் வித்தியாசம் கூடாது. வீண் அலங்காரம் செய்வது பெண்சமுதாயத்தைக் கீழ்மைப்படுத்தும் ஆ) உடையில் வீண் ஆடம்பரத்தை ஒழிக்க வேண்டும் இ) மேல் நாட்டாரைப் போன்று ஆண்-பெண் ஆடை அணியவேண்டும் ஈ) பெண்கள் கூந்தலை நீண்டு வளர்த்துக் கொள்வது அநாகரிகமும் தேவையற்ற தொல்லையும் ஆகும். கிராப் வைத்துக்கொள்ள வேண்டும்
10) “பாமர மக்களிடையே பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்பியதில் பெரியாருக்கு இணையாக ஆசியாவிலேயே எவரும் இல்லை என ஆர்.எடிசன்ராஜா என்னும் வரலாற்று அறிஞர் தமது நூலில் எழுதியுள்ளார் அந்த நூலின் பெயர்
அ) History of TamilNadu ஆ) History of Modern India இ) History of South India ஈ) History of Modern Tamil Nadu