ஈழத்தமிழரான அகில் இச்சிறுகதையை எழுதியிருக்கிறார். தமிழர் வாழ்வில் தற்போது நிலவும் முதியோர் மீதான பார்வையை இக்கதை எடுத்துரைக்கிறது. தன் குழந்தையின் கேள்வியிலிருந்து மனதை மாற்றிக்கொள்கிறார் அப்பா. இக்கதை நீங்கலாக இன்னும் 13 கதைகளுடன் ஒரு தொகுப்பாக கூடுகள் சிதைந்தபோது என்ற நூல் தமிழுக்குப் புது வரவு. புலம் பெயர் தமிழினத்தின் உணர்வுகள், தன் தாயகம் குறித்த நினைவுகள் என அழுத்தமான பதிவுகளாக அமைந்துள்ளன. இயல்பான நடையில் எழுதியிருப்பது சிறப்பு. உறுத்தல் என்ற இக்கதை, மற்றும் கூடுகள் சிதைந்த போது, அண்ணாநகரில் கடவுள் ஆகிய கதைகளும் வாசகர்களைக் கவரும். நூலை வம்சி புக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. (19.டி.எம்.சாரோன் , திருவண்ணாமலை, செல்:94448 7023, பக்184, விலை ரூ.120/-)