அய்.நா.அவையின் ஆய்வு அறிக்கை ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7,500 ஹெக்டேரில் கஞ்சா பயிரிடப்படுகிறது. அதேபோல் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 30 லட்சம் பேர் ஹெராயின் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். 2011ல் மட்டும் 17 டன் ஹெராயின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8 டன் ஆப்கானில் இருந்து கடத்தப்பட்டது. 9 டன் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.
நகர்ப்புரங்களில்தான் ஹெராயின் பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர். தென் மாநிலங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஏற்கெனவே கடவுள் போதை, மத போதை, ஜாதி போதை அதிகம் உள்ள இந்தியாவில் இது வேறயா… நாடு வௌங்கிரும்.