மஞ்சை வசந்தன்
திராவிடர்கள் (தமிழர்கள்) வாழ்ந்த நிலப்பகுதிக்குள் ஆரியர்கள்நுழைந்து பரவி, குழுக்களாக வாழ்ந்து வந்தபோதே ஆரியர்_ திராவிடர் போர், மோதல், எதிர்நிலை உருவாகிவிட்டது.
ஆரியர்கள் திராவிடர்களோடு எதிர்நிலை
யில் நின்று தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வருணன், அக்னி போன்றவற்றை பிரார்த்
திப்பதே வேதங்கள். ஆக வேதம் உருவாக்கப்
பட்டதே ஆரிய _ திராவிட மோதலின் விளைவுதான்.
ஆரியர்களுக்குத் தொடக்க காலத்தில் உருவ வழிபாடு இல்லை. இயற்கைச் சக்திகளை வழிபடுதல், பலியிடுதல், யாகங்கள் செய்தல் என்ற முறையிலே இருந்தனர். கடவுள் வழிபாடு அவர்களிடம் இல்லை.
ஆனால், திராவிடர்கள் ஆண், பெண்
உறுப்பு வழிபாடு, தாய் வழிபாடு, நிலத்தலைவர்
வழிபாடு, வீரர் வழிபாடு, உயர் பெண்டிர் வழிபாடு என்று உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தனர். ஆனால் அவை, கடவுள் வழிபாடு அல்ல.
ஆரியர் வழிபாடுகளும், சடங்குகளும், வேதங்களும், ஸ்மிருதிகளும் அவர்கள்
உயர்விற்கும், ஆதிக்கத்திற்கும், மற்றவர்களின் தாழ்விற்கும் உரியதாய் வடிவமைக்கப்பட்டன.
தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக வருணங்களை உருவாக்கினர். வருணங்களை நடைமுறைப்படுத்த ஸ்மிருதிகளை உருவாக்கினர். தங்கள் ஏற்பாடு என்றென்றும் நிலை பெற்று நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களின் இந்தக் கோட்பாடுகளை சனாதனம் என்றனர். ஆக, ஆரிய மதம் என்பதே சனாதன மதம் என்றானது.
பின்னாளில் தமிழர் நன்றியின் பாற்பட்ட வழிபாடுகளை கடவுள் வழிபாடுகளாக்கினர். ஆரியர்களின் மேக வழிபாடு கரியமால் வழிபாடு_ விஷ்ணு வழிபாடாக்கப்பட்டது. தமிழர்களின் உறுப்பு வழிபாடு சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.
சனாதனத்தை எதிர்த்து உருவான பவுளத்தமும், சமண
மும் ஆரியர்களால் ஊடுருவி அழிக்கப்பட்டன. தமிழர்களின் முருக வழிபாடு என்ற நிலத் தலைவர் வழிபாடு புராண கதைகள் மூலம் சுப்பிரமணியன் ஆக்கப்பட்டது. புத்தர் விநாயகராக மாற்றப் பட்டு, சுப்பிரமணியனுக்கு அண்ணன் ஆக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக எல்லா வழிபாடுகளையும் புராணம் மூலம் உறவுச் சங்கிலியால் ஒருங்கிணைத்தனர் ஆரியர்கள்.
ஆக, புத்தம், சமணம், சைவம், மாலியம் எல்லாம் ஒரே கோவையில் கொண்டு வரப்பட்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்து மதம் ஆனது.
இப்பொழுது இந்து மதம் என்றாலே அது சனாதன மதம் என்று திரிக்கப்படுகிறது. அதன் வழி ஆரிய மேலாண்மையும், சமஸ்கிருத மேலாண்மையும் நிலைநிறுத்தப்பட தீவிரமான முயற்சிகள், செயல் திட்டங்கள் ஒவ்வொரு நாளும் நிறைவேற்றப்படுகின்றன.
3% ஆரிய பார்ப்பனர்களுக்கு உயர்வும், ஆதிக்க அதிகாரமும், பயனுடன் தரக்கூடிய சனாதன நடைமுறையை 97% மக்கள் மீது திணிக்கும் முயற்சி இந்தியா அளவில் பா.ஜ.க. ஒன்றிய அரசால் பல வழிகளில் ந¬முறைப்படுத்தப்படுகிறது.
சனாதனத்தின் கேடுகள்
பிறவி பேதம்: சனாதனத்தின் அடிப்படைக் கோட்பாடு இது. பிறப்பால் படிநிலை உயர்வு தாழ்வை உருவாக்கி எக்காலத்திலும் நிலை நிறுத்தி நடைமுறைப்படுத்தும் கொள்கை. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் வர்ணாஸ்ரமம்.
ஆரியப் பார்ப்பனர்களை முதல் நிலையில், உயர்நிலையில் வைத்து அதற்கு அடுத்தடுத்து மற்ற வர்ணத்தினர் என்று பிறப்பால் படிநிலை உயர்வு தாழ்வு கற்பிப்பது வர்ணாஸ்ரமம்.
வர்ணாஸ்ரமம் உருவாக்கபட்ட காலத்தில் யார் பிராமணர் என்று உயர்நிலை வர்ணமாய்ப் பிரிக்கப்பட்டார்களோ, அவர்களின் தலைமுறை உலகம் உள்ளளவும் பிராமணர் பிரிவினராய் வாழ்வார். வர்ணப் பிரிவின் போது யார் சூத்திரப் பிரிவினராய்ப் பிரிக்கப்பட்டார்களோ, அவர்கள் உலகு உள்ளளவும் தலைமுறை தலைமுறையாய் சூத்திரர்களாக வாழ வேண்டும். அவ்வாறே சத்திரியப் பிரிவும், வைசியப்பிரிவும் உலகம் உள்ளவரை சத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் வாழ வேண்டும்.
பிராமணன் உச்சநிலை உயர் வர்ணத்தான் ஆவான். அவனுக்குக் கீழே சத்திரியன், அவனுக்கும் கீழ் வைசியன், அதற்கும் கீழ் சூத்திரன்.
பிராமணன் மற்ற மூன்று வர்ணத்தாலும் வணங்கத்தக்கவன். சூத்திரன் தனக்கு மேலுள்ள மூன்று வர்ணத்தாருக்கும் அடிமையாய் இருந்து பணிவிடைகளைச் செய்ய வேண்டும்.
சூத்திரன் நல்ல உணவு உண்ணக் கூடாது, நல்ல உடை, நல்ல வீடு, நல்ல பெயர் எதையும் வைத்துக்கொள்ளக் கூடாது; பயன்படுத்தப்படக்கூடாது.
சூத்திரனுக்கு கோயிலுக்குள் செல்ல, கடவுளை வணங்க உரிமையில்லை. ஒரு வர்ணத்தார் இன்னொரு வர்ணத்தாருடன் மண உறவு கொள்ளக்கூடாது.
இந்த நான்கு பிரிவிலும் சேராதவர்கள் பஞ்சமர்கள். இவர்கள் தீண்டத்காதவர்கள். இவர்களில் சிலர் பார்க்கவே கூடாதவர்கள் என்ற பிரிவில் வைக்கப்பட்டனர்.
ஆதிக்கம்: ஆரியப் பார்ப்பனர்கள் அனைத்து அதிகாரங்களும் உடையவர்கள். அவர்களை மற்றவர்கள் எதிர்க்கவோ, மறுக்கவோ கூடாது. அவர்கள் கூறுவதற்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பிராமணர்கள் கொலை செய்தாலும் அவர்களைத் தண்டிக்க முடியாது. அவர்கள் தலை முடியை மழித்தலே தண்டனை. கடவுளை நெருங்க அவர்களுக்கு மட்டுமே உரிமை. கடவுளே பிராமணுக்குக் கட்டுப்பட்டது என்று எழுதி வைத்துள்ளார்கள். அவர்கள் மொழியான சம்ஸ்கிருதம் தான் உயர் மொழி, புனித மொழி. மற்ற மொழிகளெல்லாம் “நீச பாஷைகள்”. அவர்கள் கலையே உயர்ந்தது. அவர்கள் பண்பாடே சிறந்தது. உயர் ஆசனத்தில் அவர்கள் அமர, மற்றவர்கள் கீழே அமர வேண்டும். அவர்கள் சாப்பிட்ட பிறகுதான் மற்றவர் சாப்பிட வேண்டும். அவர்களுக்கே உயர் பதவிகள்.
உரிமைப் பறிப்பு: பெண்கள் படிக்கக்கூடாது. பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. பெண்கள் ஆண்களைச் சார்ந்தே வாழ வேண்டும். அவர்கள் சுயமாகச் சிந்திக்கக் கூடாது. கணவன் இறந்த பின் மனைவிக்கு வாழ உரிமையில்லை. சூத்திரர்கள் படிக்கக் கூடாது. பஞ்சம மக்களுக்கு மற்றவர்களோடு சேர்ந்து வாழ உரிமையில்லை.
சமத்துவமின்மை: ஒரு மனிதருக்குள்ள உரிமை, வாய்ப்பு, மற்றவர்களுக்கு இல்லை. பிராமணன் மனிதருள் உயர்ந்தவன்; சூத்திரன் மனிதருள் தாழ்ந்தவன்¢. பஞ்சமன் சூத்திரனை விடவும் தாழ்ந்தவன். தண்டனையானாலும், திருமணமானாலும், உடை, அணிகலன் அணிவதானாலும் ஒரு வருணத்திற்கு உள்ள உரிமை மற்ற வருணத்தாருக்கு இல்லை. உண்ணுவது, வசிப்பது, பொது இடங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றில் எல்லா வருணத்தாருக்கும் சம உரிமை இல்லை.
இழிவு: சூத்திரர்களும், பஞ்சமர்களும் மிக மோசமாக இழிவுபடுத்தப்பட்டனர்.. பிராமணர்கள் வசிக்கும் வீதியில் பஞ்சமர்கள் நடந்து கூடச் செல்லக் கூடாது. பஞ்சமர்களைத் தொட்டால் தீட்டு. அவர்கள் பொது நீர் நிலைகளைப் பயன்படுத்தக் கூடாது. பஞ்சமர்கள் நிழல் கூட பிராமணர்கள் மீது படக்கூடாது. பூஜை செய்யும் போது சமஸ்கிருதத்தை தவிர மற்ற மொழிகளில் பேசக்கூடாது. மற்ற மொழிகளெல்லாம் நீச மொழிகள்
விடுதலை பெற்ற இந்தியாவில்: இப்படித்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சனாதனத்தின் பேரால், மக்கள் ஆரிய பார்ப்பனர்களால் கொடுமைப் படுத்தப் பட்டனர். ஆங்கில ஆட்சியின் போது சற்றே மனித உரிமைகள் மீட்கப் பட்டன. நாடு விடுதலை அடைந்த பின் சற்றே சமத்துவ நிலை வந்தது. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்களால் சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும், பெண்களுக்கும் சில உரிமைகள் வாய்ப்புகள் கிடைத்தன.
இதைப் பொறுக்க முடியாத ஆரியப் பார்ப்பனர்கள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மீண்டும் சனாதனத்தை முழுமை
யாகச் செயல்படுத்தத் தொடர்ந்து முயற்சி செய்து இறுதியில் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி கடந்த பத்து ஆண்டுகளாக மெள்ள மெள்ள மீண்டும் சனாதன தர்மத்தை நுழைத்து வருகின்றனர்.
மீண்டும் சனாதனம்
விடுதலை அடைந்த பின் சட்ட ரீதியாக எல்லோருக்கும் சம வாய்ப்பும், சமநீதியும், சம உரிமையும் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மெள்ள மெள்ள கல்வி, வேலை வாய்ப்பில் மேலே எழுந்தனர். இதைக் கண்டு பொறுக்காத ஆரியப் பார்ப்பனர் கூட்டம், மீண்டும் அவற்றைப் பறித்து பழைய சனாதன நிலையைக் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
இடஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்த்தார்கள். முடியவில்லையென்றதும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்த்து விட்டனர்.
பொதுத் துறைகளில்தான் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டட மக்கள் வேலை வாய்ப்புகள் பெற்றனர். அதைத் தடுக்க பொதுத் துறைகளைத் தனியார் துறைகளாக ஆக்கி வருகின்றனர்.
ஓரிரு தலைமுறைதான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் பங்கெடுத்தனர். அதை ஏற்க முடியாத ஆரியப் பார்ப்பனர்கள் புதிய கல்வி என்ற சூழ்ச்சி முறையைக் கொண்டு வந்து கல்வியைப் பறிக்க முயற்சிக்கின்றனர்.
குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்னும் மறைமுகத் திட்டத்தை இதில் செயல்படுத்த முற்படுகின்றனர். இடை நிற்றலை, அதிகப்படுத்தி, கல்வியைக் கைவிடும் மாணவர்கள் குலத் தொழிலைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்குகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவம், உயர்கல்வி பெறக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் ‘நீட்’ தேர்வைக் கொண்டு வந்து விடாப்படியாக நடைமுறைப்படுத்துகின்றனர்.
ஒற்றைச் செயல்முறைகளைக் கட்டாயப்
படுத்தி அதன் மூலம் மக்களின் தனித்தன்மையை, பண்பாட்டை ஒழிக்க முற்படுகின்றனர்.
ஒரே மதம், ஒரே கடவுள், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரு உணவு, ஒரே கலாச்சாரம் என்று கொண்டு வர தீவிரமாய் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மதவெறுப்பை ஒவ்வொரு நாளும் வளர்த்து, மதமோதலை உருவாக்குவதோடு, மதச் சிறுபான்மையினர் வாழ்வை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.
இந்த அறிவியல் உலகில், மனித உரிமைகள் உலக அளவில் தீவிரமாய்க் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் காலத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சனாதன ஆதிக்க நிலையை உருவாக்க திட்டங்கள், சட்டங்கள் என்று ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். அதற்கு ஏற்ப அரசியல் சட்டத்தையே திருத்தி வருணாஸ்ரம. மனுதர்ம, விதிமுறைகளை அமல்படுத்தி, பெரும்பான்மை மக்களை, பெண்களை ஒடுக்கி உரிமையற்றவர்களாக ஆக்க முயற்சிக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில், இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்கும்_ போராடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு அதிலும் குறிப்பாக திராவிடர் இயக்கங்கள்.
சனாதனம் தகர்க்கும்
தமிழர் தலைவர்
இந்தப் பாசிஸ ஆதிக்க, மனித விரோத ஆரிய சனாதன தர்மத்திற்கு எதிராய் இறுதியில் ஆர்த்தெழுந்தவர்கள் சாகு மகராஜ், ஜோதிராவ்பூலே, சாவித்திரி பூலே, அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, தமிழர் தலைவர் கி.வீரமணி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகியோர் முதன்மையானவர்கள்.
சாகு மகராஜ், ஜோதிராவ்பூலே, சாவித்திரிபூலே, அம்பேத்கர் போன்றோர் தனி மனித முயற்சியில் களம் இறங்கிப் போராடியவர்கள். தந்தை பெரியார் மட்டுமே சனாதனத்திற்கு எதிராய் இயக்கம் கண்டவர். சனாதனத்தின் ஆணிவேரையே களைந்தெறிய களம் அமைத்துப் போராடியவர். சனாதனத்தின் அங்கங்களான கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், இதிகாசம், புராணம், கோயில், பூசை, விதி, பிறவி, பெண்ணடிமை உட்பட பிறவிபேதம், சடங்குகள், பண்டிகைகள் போன்றவற்றை அடியோடு வேர் களைய தன் வாழ்நாள் முழுவதும் போராடி ஓரளவு வெற்றியும் பெற்றார் பெரியார்.
தந்தை பெரியாரின் முதன்மை மாணவர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் பெரியாரோடு இணைந்து போராடியதோடு, ஆட்சிப் பொறுப்பில் இருந்து சட்டப்படியாகவும் சனாதனத்தின் முதுகெலும்பை முறித்தனர். அதன் தொடர்ச்சியாய் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சனாதனத்திற்கு எதிரான போரை ஆட்சியில் இருந்துகொண்டு சளைக்காது, சாதனையாய்ச் செய்து வருகிறார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 10 வயதில் பெரியார் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலம் முதல் 90 வயதைத் தொடும் இன்றுவரை, தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் அணுவளவும் பிறழாது சனாதன எதிர்ப்புப் போரை, பேச்சு, எழுத்து, நூல், பத்திரிகைகள், போராட்டங்கள் என்று பல்வழிப் பாய்ச்சலின்மூலம் சனாதனத்
தைச் சன்னமாய்ச் சிதைத்து வருகிறார்.
கடை கோடி மக்களுக்குக் கல்வி
சனாதனம் அடித்தட்டு மக்களிடம் முதலில் பறித்தது கல்வியைத்தான். எனவே, அவர்களால் பறிக்கப்பட்ட கல்வியை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்த பெரியாரின் வழியில், தமிழர் தலைவர் ஆசிரியர் பணியாற்றி வருகிறார். கிராமந் தோறும் கல்வி நிலையங்கள், திராவிடர் கழகத்தின் சார்பில் கல்வி நிலையங்கள் என்று கல்வி வாய்ப்பை அரசின் துணையோடு பெருக்கி வருகிறார். கல்வி பெறுவதில் எங்கு தடைவரினும் அதை உடனடியாகத் தகர்த்தும் வருகிறார்.
ஜாதி ஒழிப்பு: தந்தை பெரியாரின் தலைமைப் பணியான ஜாதி ஒழிப்பை ஆசிரியரும் முதன்மைப் பணியாக மேற்கொண்டு, ஒவ்வொரு நாளும் ஜாதி ஒழிப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஜாதி ஒழிப்பிற் கென்றே நெடும் பயணத்தையும் மேற்கொண்டார். தன் குடும்பத்தில் அனைத்து மணங்களையும் ஜாதி மதம் மறுத்த மணங்களாக நடத்தி வைத்துள்ளார். ஜாதி மறுப்பு மணங்களை நாள்தோறும் ஊக்கப்படுத்தி வருகிறார்.
ஜாதியடிப்படையில் எங்கு அநீதியென்
றாலும் அங்கு, முதல் போர்க்கள வீரராக நின்று போராடி வருகிறார். எடுத்துக்காட்டாக தருமபுரியில் நடைபெற்ற ஆணவக் கொலையில் இவர் நின்ற போர்க்களத்தை நினைவில் கொள்ளலாம்.
இட ஒதுக்கீடு: ஜாதி ஒழிப்பின், சமுதாய சமத்துவத்தின், சமூக நீதியின், சமூக உரிமை மீட்பின் ஒரு முதன்மை செயல்திட்டம்தான் இட ஒதுக்கீடு. இதை ஒழிக்க எத்தனையோ சதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அத்தனையையும் தன் பேச்சால், எழுத்தால், போராட்டங்களால், சட்ட அறிவு நுட்பத்
தால், ஆட்சியாளர்களைக் கையாண்ட அணுகுமுறையால் அடித்து நொறுக்கி, இட ஒதுக்கீட்டைக் காத்ததோடு, அதன் அளவையும் தமிழ்நாட்டில் உச்ச நிலையில் 69% கொண்டு நிறுத்தியுள்ளார். பொருளாதார அடிப்படை இதில் புகுத்தப்படும் போதெல்லாம் அதை அடித்து நொறுக்கும் அரிய பணியை ஆசிரியர் செய்து வருகிறார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: ஜாதி ஒழிப்பிற்கும், சனாதனத் தகர்ப்பிற்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை முதன்மையானது. அதையுணர்ந்து அய்யாவின் அடியொற்றி அரிய சட்டப் போராட்டங்களை நடத்தி வெற்றி வாகை சூடி, ஆரிய சனாதனத்தைத் தகர்த்துள்ளார்.
பெண்ணடிமை ஒழிப்பு: அய்யாவின் வழியில் ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு நாளும் பெண்ணுரிமைக்காகப் போராடி வருகிறார். இயக்கத்தின் சார்பில் கல்வி நிலையங்கள் அமைக்கும் போது பெண் கல்விக்கே முன்னுரிமையளித்து வருகிறார். தஞ்சை வல்லத்தில் பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை பெண்களுக்காகவே தொடங்கி உலக வரலாற்றில் ஓர் இடம் பிடித்தார்.
இந்தியா அளவில் சனாதனம் தகர்ப்புப் போர்: ஒன்றிய ஆட்சியில் பி.ஜே.பி. கட்சி, ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில் செயல் திட்டங்களை நிறைவேற்றி சனாதனத்தை வலிய நடைமுறைப்படுத்த முயற்சிப்பதால், அதை இயக்க ரீதியாய் எதிர்ப்பதோடு, சமூக நீதிகாக்கும் வரலாற்று நாயகர், சனாதனம் தகர்ப்பு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சரியான செயல் திட்டங்களைத் தந்து, துணை நின்று போராடி வருகிறார்.
இந்திய அளவில் சனாதன எதிர்ப்பை வலுப்படுத்தி, ஒத்தகருத்துடைய தலைவர்களை ஒருங்கிணைத்து, சனாதனத்தைத் தகர்த்து, ஜனநாயகத்தைக் காத்து வருகிறார்.
90 வயதிலும் ஓய்வில்லாமல் தொடரும் அவரது அரிய பணிகள் 100 வயது கடந்தும் தொடர வாழ்த்துகிறோம்!
வாழ்க பெரியாரின் சரியான வாரிசு ஆசிரியர் பெருந்தகை!
தொடர்க அவரது தொய்வில்லாத் தூய
தொண்டு!