ஆண்களுக்கான ஆய்வுகள்
மரு. இரா.கவுதமன்
வாழ்வியல் முறைகளில் மாற்றம் (Lifestyle changes)
* சில மருந்துகள் ஆண் கரு வளர்ச்சியைப் பாதிப்பதால், மருத்துவ அறிவுரைப்படி அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* கரு வளர்ச்சியைத் தடுக்கும் சில உணவு வகைகளைத் தவிர்த்தல் நல்ல பலனைக் கொடுக்கும்.
* அடிக்கடி உடலுறவு வைத்துக்-கொள்ளல்.
* கருமுட்டை வெளியேறும் (Ovulation) நாளைக் கணக்கிட்டு அன்று உடலுறவு கொள்ளுதல்.
* தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல்
* இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்த்தல்
* சத்தான உணவுகளை உண்ணுதல்
* மனநலத்தைப் பேணுதல்
* “குழந்தை பிறக்காது என்று நினைக்கும் மனத்தளர்ச்சியை (Depression) அகற்றுதல்
* சரியான மருத்துவ அறிவுரை பெறுதல்
மருந்துகள் (Medicines): மருத்துவர் அறிவுரைப்படி சில மருந்துகள் உட்கொள்ளலாம். இம்மருந்துகள் ஆண் அணுக்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதோடு, அவற்றின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவும். அதனால் மகப்பேறுக்கான வாய்ப்புப் பெருகும்.
ஆண் அணுக்கள் செயல்பாட்டை மீட்டெடுப்பு (Sperm Retrival)
விந்து குறைபாடோ, ஆண் அணுக்கள் வெளியேற்றத்தில் தடையோ, எண்ணிக்கைக் குறைபாடோ, இயக்கக் குறைபாடோ இருப்பின் மருத்துவ உதவியுடன் ஆய்வு செய்து குறைபாட்டைக் களைய வேண்டும்.
அறுவை மருத்துவம் (Surgery): விரையில் சிரை வீக்கம் (க்ஷிமீக்ஷீவீநீஷீநீமீறீமீ) குழந்தையின்மைக்குக் ஒரு காரணமாக அமையும். அறுவை மருத்துவம் செய்வதன்மூலம் இந்தக் குறைபாட்டைச் சீராக்கலாம். மகப்பேறின்மைக்கு இது காரணமென்றால், குழந்தைப்பேறுக்கு வாய்ப்பு ஏற்படும்.
பெண்களுக்கான மருத்துவ முறைகள்:
குழந்தையின்மைக் குறைபாட்டால் பாதிக்கப்-பட்ட பெரும்பாலான பெண்கள் ஒன்று அல்லது இரண்டு மருத்துவ முறைகளால் மகப்பேறு அடையும் வாய்ப்பு ஏற்படும். வேறு சிலருக்கோ, ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முறைகளால் இக்குறைபாட்டை நீக்க முடியும்.
மருந்துகள் மூலம் கருமுட்டை வெளிப்-பாட்டைச் சீராக்குதல்(Stimulating Ovulation with fertility drugs):
கருவுறுதலை ஊக்குவிக்கும் மருந்துகள், கருமுட்டை வெளிப்பாட்டைச் சீராக்கிக் குழந்தையின்மைத் தன்மையைப் போக்க வல்லவை. கருமுட்டை வெளிப்பாட்டில் ஏதேனும் சிக்கல் இருப்பின் இம்மருந்துகள் அதை ஒழுங்குப்படுத்தும் தன்மையுடையவை.
கருவூட்டல் (Intra uterine insemination-IUI): கணவரின் விந்தணுக்கள் முழுத்திறனோடு இருக்கும் பொழுது, குழந்தையின்மை இருந்தால் அந்த விந்தணுக்களை கருப்பையில் செலுத்தி, மருத்துவர்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவர்.
அறுவை மருத்துவம்: (Surgery to restore fertility):உடலியல் அளவில் கருப்பையிலோ, கருக்குழாயிலோ ஏற்படும் குறைகளைச் சரியாக்க அறுவை மருத்துவம் செய்ய வேண்டி இருக்கும். கருச்சுவரில் உண்டாகும் சிறுகட்டிகள் (Endometrial Polyps), கருப்பைக் கட்டிகள் (Fibroids), கருப்பைக் காய வடுக்¢கள் (Intra uterine scar tissue) கருக்குழாய் அடைப்புகள் போன்றவற்றை அறுவை மருத்துவம் மூலம் சரியாக்கி விடுவதன் மூலம், கருவுறுதல் நிகழ வாய்ப்பு ஏற்படும். மாறிவரும் மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் “வயிற்றை உள்நோக்கி அறுவை மருத்துவம் (Laproscopic Surgery) மூலம் பெரும்பாலான இக்குறைபாட்டைச் சீராக்கலாம்.
செயற்கை முறை கருத்தரித்தல்: (Assisted Reproductive Technology)
கருக்குழாய்க்குள்ளோ, கருப்பையிலோ ஒன்றிணைய முடியாத பெண் கரு முட்டையையும், ஆண் கருவையும் வெளியே இணைத்துக் கருவை உருவாக்கும் முறையையே செயற்கை முறை கருத்தரித்தல் (ART) என்று அழைக்கிறோம். “சோதனைக் குழாய்க் குழந்தை’’ (Test Tube Baby) என்று பேச்சு வாக்கில் வழங்கப்படும் இம்முறையில் “வெளிச்சோதனை முறை கருக்கட்டல்’’ என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. செயற்கை முறையில் கருமுட்டையுடன் விந்தை இணைத்து, கருவை உருவாக்கி, பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். அக்கரு, முளையாகி, பல செல்களாக வளர்ந்து, குழந்தையாக உருவாகும். நவீன மருத்துவத்தில் பல இடங்களில் இம்மருத்துவ முறை இப்பொழுது கையாளப்படுகிறது. தீர்த்தாடனம் செய்தும், அரச மரத்தைச் சுற்றியும் ஆத்தா கோவில்களில் தொட்டில் கட்டியும், காசி, இராமேஸ்வரம் என்றெல்லாம் “சேத்ராடனம்’’ செய்தும், கண் திறக்காத கடவுளுக்கு சவால்விடும் வகையில் “சோதனைக் குழாய் குழந்தை’’ மூலம் பல ஆயிரக்கணக்கான இணையர்களுக்கு மகப்பேறு உருவாகும் வாய்ப்பை மருத்துவம் உருவாக்கிக் கொடுத்துள்ளது.
“பிள்ளைப் பேற்றுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம்’’ என்றும்,
“எதிர்காலத்தில் குடுவைக்குள் குழந்தையை உருவாக்கும் நிலை வரலாம்’’ என்றும் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் ஒரு 70, 80 ஆண்டுகளுக்கு முன்பே “இனி வரும் உலகம்’’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதை எண்ணிப் பாருங்கள்.
செயற்கை முறை கருத்தரித்தல் – சிக்கல்கள்(Complications of Assisted Reproductive Technology):
*ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை பிறப்பு: பல நேரங்களில் செயற்கை முறை கருத்தரித்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இரண்டு, அல்லது மூன்று குழந்தைகள் கூட பிறக்கின்ற நிலை ஏற்படலாம்.
இரத்தப் போக்கு, நோய்த் தொற்று (ஙிறீமீமீபீவீஸீரீ ஷீக்ஷீ மிஸீயீமீநீtவீஷீஸீ): இந்த முறையிலான கருத்தரித்தல் வெளியே நிகழ்வதால் கருவை, கருப்பையில் பொருத்தும் பொழுது, சிலருக்கு இரத்தப் போக்கும், சிலருக்கு நோய்த் தொற்றும் ஏற்படக்கூடும். ஆனால், மருத்துவத்தால் இவற்றைச் சரியாக்கலாம்.
* மனநலம் ஒரு முக்கியமான செயல்-பாடு. பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து, இப்பொழுது குழந்தை பிறக்குமா என்ற கேள்விக் குறியோடு, மனதில் ஏற்படும் குழப்பத்தையும் அதன்பின் விளைவாக ஏற்படும் மனத்தளர்ச்சியையும் தவிர்க்க வேண்டும். பெண்கள் அவர்களின் இணையர்களோடு, உறவினர்களோடு, நண்பர்-களோடு பேசுவது, கலந்துறவாடுவது நல்ல மனநிலையை உண்டாக்கும்.
* மருத்துவர் அறிவுரைப்படி எளிதான உடற்பயிற்சிகள், நல்ல சத்தான உணவு போன்றவை நல்ல முறையில் மகப்பேற்றை உண்டாக்கும். ஸீ