அய்யகோ!
பசியோடு
கந்தல் உடை
அணிந்து வந்த
பிச்சைக்காரனை
விரட்டுகிறான்…
சூடான இட்லியும் வடையும்
காகத்திற்கு
எடுத்து வைத்து
தனது முதல் வியாபாரத்தைத்
தொடர்ந்த கடைக்காரன்
* * * * * * * *
தூக்கில்
தொங்கியும்
சாகவில்லை
தண்ணீர்க் குடம்…
* * * * * * * *
யாராக இருக்கும்…?
பக்தனின் நெஞ்சம்
பதை பதைத்தது
வீட்டு வாசலில்
அறுத்து வைக்கப்பட்ட
எலுமிச்சை…!!
* * * * * * * *
கருவறைக்குள் நுழையாதே!
பார்ப்பன நரிகளின்
ஊமைக் காமக் களியாட்ட தேவநாதன் கைதான பிறகு
காரணம் தெரிந்தது…
* * * * * * * *
அறியாமை
நெஞ்சை
சுட்ட வண்ணம்
வட்டமிடும் எண்ணம்
வர மறுக்கும் வட்டி…
* * * * * * * *
பல லட்சம்
செலவு செய்து
கட்டிய வீடு
உடைக்கப்பட
வேண்டியது பூசணிக்காய்
அல்ல…
அச்சம் எனும்
அறியாமை…
* * * * * * * *
உண்டியல்
அவ்வப்போது
கொஞ்சம் கொடுத்து
உதவினேன்
அவசர காலத்தில்
தன் நன்றியினைக்
காட்டியது உண்டியல்..
– பா.இராஜேந்திரன், அருப்புக்கோட்டை
வேலைக்காரி
மழைக்குக் கூட
பள்ளிக்கூடம்
ஒதுங்காத – என்
சகோதரி,நன்றாகத்தான்
பெருக்கு கிறாள்
பணக்காரரின் வீட்டை.
– வெங்கட. இராசா, ம.பொடையூர்
Leave a Reply