1) மலேசிய நாட்டில் நாகம்மையார் அவர்களின் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் பற்றி எழுதிய சிங்கப்பூர் பத்திரிகை எது?
அ) இனமுரசு ஆ) முன்னேற்றம் இ) காலைக்கதிர் ஈ) தமிழ்முரசு
2) காங்கிரஸ் ஆட்சியில் தீண்டாமை ஒழிப்புக்கும், அரிஜன சேவா சங்கத்திற்கும் பார்ப்பனரைத் தலைவராக நியமித்ததைக் கண்டித்துப் பேசியபோது பெரியார் அவர்கள் கையாண்ட பழமொழி
அ) நான் ஓயாமல் அழுகிறேன். நீ நோகாமல் அடி ஆ) நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல இ) பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விட்டுப் பார்ப்பானை அடி ஈ) குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வது போல
3) பின்வருவனவற்றுள் பெரியார் கூறிய சொற்றொடர் யாது?
அ) நாடறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் எதற்கு? ஆ) பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் வாழும் நாடு கடும்புலி வாழும் காடு இ) சிறுத்தைக்குப் புள்ளி மாறினாலும் பார்ப்பானுக்குப் பிறவிப் புத்தி மாறாது
ஈ) பார்ப்பானையும், பாம்பையும் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடி
4) பெரியார் அவர்களின் இறுதிச் சொற்பொழிவு நடந்த ஆண்டும் இடமும் யாது?
அ) 15.2.1973 தஞ்சை திலகர் திடலில் ஆ) 12.3.1972 சென்னை பெரியார் திடலில் இ) 19.2.1975 மதுரை தமுக்கம் மைதானம் ஈ) 19.12.1973 சென்னை தியாகராயர் நகரில்
5) குடிஅரசு ஏடு தொடங்கப்பட்ட நாள் எது?
அ) 2.5.1925, ஆ) 9.1.1927 இ) 11.5.1933 ஈ) 22.11.1925.
6) செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் ஈ. வெ. இராமசாமி சகாப்தம் பிறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன என்று பேசியவர் யார்?
அ) சவுந்தரபாண்டியன் ஆ) பி. டி. இராசன் இ) சூ. ஆ. முத்து (நாடார்) ஈ) டாக்டர் சுப்பராயன்
7) தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த நாள் எது?
அ) 02. 03. 1929 ஆ) 10. 03. 1932 இ) 02. 02. 1929 ஈ) 02. 12. 1929
8) பின் வரும் பெரியார் வாசகத்தில் உள்ள கோடிட்ட இடங்களுக்கான உரிய ஒரு சொல் யாது? ….. மற்றும் சுதந்திரம் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; …… அற்றவர்களுக்குச் சுதந்திரம் பலனளிக்காது.
அ) பொருளாதாரச் சமத்துவம் ஆ) பகுத்தறிவு இ) சுயமரியாதை
ஈ) ஆங்கிலப் படிப்பு
9) சீர்திருத்தம் என்பதற்குப் பெரியார் அளிக்கும் ஒரு பொது விளக்கம் யாது ?
அ) தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளுதல் ஆ) மூடநம்பிக்கைகளை விட்டுவிடல் இ) வருணாசிரமத்தை ஒழித்தல் ஈ) கடவுளையும் மதத்தையும் மறுத்தல்
10) மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து தந்தை பெரியாரிடம் பேட்டி கண்ட மத்திய அமைச்சர் யார்?
அ) சந்தானம் ஆ) சி. சுப்பிரமணியம் இ) மரகதம் சந்திரசேகர் ஈ) டாக்டர் சந்திரசேகர்