முகநூல் பேசுகிறது

ஜனவரி 16-31

நண்பர் ஒருவர் என்னிடம் பேசும்போது, ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றார்….சரி என்று, நான் ஒரு கேள்வி கேட்டேன், அப்போ ‘சமஸ்கிருதம்’ யாரு மொழி? என்று கேட்டேன்….பதில் சொல்ல வேண்டியது தானே…அதனை விட்டு, உன்கிட்டல்லாம் பேசமுடியாது என்று கோவிச்சுகிறார்…..இவ்வளவுக்கும் நான் வரலாற்று உள்ளே போகல.

நான் சொன்னேன், கோவிச்சுக்காதிங்க…ஆங்கிலம் பேசுறவன் எல்லாம் ஆங்கிலேயன் கிடையாது…அதே மாறி தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழன் கிடையாது….எனவே துக்ளக் படிச்சிட்டு …என்கிட்ட வந்து உளறக்கூடாது என்று சொன்னேன். – பரணீதரன் கலியபெருமாள்

கணவனும் மனைவியும் திருவிழாவுக்குப் போயிருந்தார்கள்.கூட்ட நெரிசலில் மனைவி காணாமல் போய்விட்டாள்.

கணவன் காவல் நிலையத்தில் புகார் செய்தான்.செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தான். ஆனால் மனைவி கிடைக்கவில்லை.

அருகில் இருந்த ராமர் கோவிலுக்குச் சென்று மனம் உருக வேண்டினான்,
”காணாமல் போன என் மனைவி கிடைக்க அருள் புரியுங்கள். ”இதே சாலை வழியாகப் போனால்,அனுமார் கோவில் வரும்.அங்கு போய் வேண்டிக்கொள்.என் மனைவி காணாமல் போனபோது தேடிக் கண்டு பிடித்தது அவர்தான்,” ராமர் தான் பேசினார்.

– டெனால்டு ராபர்ட்

ஆண்களுக்கு கால் சட்டை நல்லா இல்லை…பட்டா பட்டி + வெள்ளை வேட்டி தான் அழகு என்று ஒரு பெண்ணும் சொல்வதில்லை

 

– TPKD – TPKD / TBCD

திரும்பிப் பார்த்தவுடன் காதல் வரும் என்றால் லாரி கிளினருக்குத்தான் அதிகமாக காதல் வந்திருக்க வேண்டும்

– திருட்டுகுமரன்

The revolution will not be broadcasted by the news anchor slaves of the corporations, it will be broadcasted by the people to the people.

NoamChomski

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *