விஞ்ஞானியும் -பார்ப்பானும்!
ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சிசாலையில் கண்டறிந்த உண்மையானது, மறுநாளே, விளையாட்டுச் சாமான் செய்யும் தொழிலாளி யையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக்கும்படி மேல்நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது. நமது நாட்டிலோ கோவில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப்பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக்கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.
– அரிது! அரிது!!
ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது.
–
கடவுளும் மனிதனும்!
கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு!
உண்டு!! உண்டு!!! உதாரணம் :- மனிதன் சுருட்டுப்பிடித்து விடும் புகை கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா?
– தொகுப்பு : அ.இ.தமிழர் தலைவர், சேலம்