நாட்டில் நாம் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டியுள்ளது; அந்த மாற்றம்,இந்தியாவின் 80 சதவீத மக்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் கைகளில் உண்மையான சுதந்திரத்தை ஒப்படைத்து, அதனை வலுப்படுத்த வேண்டும். நமது நாட்டின் பத்துக் கோடி பேர் – பல நூற்றாண்டுகளாகப் பலவித கொடுமைகளுக்காளானவர்கள் _ இன்றும் தாழ்த்தப்பட்டோர் என்ற பெயரால் மோசமான நிலையிலேயே உழன்று கொண்டிருக்கின்றனர். மற்ற ஏழுகோடி பேர் பழங்குடிகள் என்னும் பெயரால் துன்பமயமான வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களைத் தவிர 12 கோடி மக்கள் பிற்பட்டோர் என்ற பெயரில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். வாக்குரிமை இருந்தும் இவ்வளவு பெரும் எண்ணிக்கையி லுள்ளவர்கள், அவர் களின் தொகையின்படி அரசாங்கப் பதவிகளில் ஏன் அமர்த்தப்பட வில்லை?
எல்லாத் துறைகளிலும் இவர் களுக்குரிய பிரதிநிதித் துவம் ஏன் அளிக்கப் படவில்லை? பெரும் பான்மையோர் சிறுபான்மையோராக் கப்பட்டுவிட்டனர். சிறுபான்மையோர் அரசு அலுவல்களிலி ருந்து வணிகம், அரசியல் அனைத்தி லும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கிராமங் களிலிருந்து தலைநகர் டெல்லிவரை அவர்களே நிறைந்துவிட்டனர். பெரும் எண்ணிக்கையினரான மக்கள் இரவும், பகலும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் வயிறு நிறையாமல் பட்டினி கிடக்கின்றனர்; சிறுபான் மையினரோ வேலை எதுவுமே செய்யாமல் உல்லாச வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மை மக்கள் சமுதாயத்தை இந்தச் சிறுபான்மையினர் கல்வியும் பகுத்தறிவுமில்லாத வர்களாக்கி, கொத்தடிமைத்தனத்தில் ஆழ்த்தி வைத்திருக்கின்றனர்.
(தாழ்த்தப்பட்டோரின் பெரும் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு. என்.சிவராஜ் 1957 ஏப்ரல் 27-இல் கான்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது) (ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய ராமராஜ்யமும் மார்க்சியமும் என்ற நூலின் முன்னுரையிலிருந்து….)