செய்திக்கூடை

ஜனவரி 16-31
  • துனிசியா நாட்டில் ஏற்பட்ட புரட்சியால் அதிபர் சைனி எல் அபிதின் அரசு பதவி விலகி எள்ளை என்ற இஸ்லாமிய கட்சியின் தலைமையில் அரசு அமைக்கப்பட்டுள்ளது.
  • மனிதனின் செயல் இழந்த மூளைக்கு எலட்ரோடு எனப்படும் பேஸ்மேக்கர் கருவியினைப் பொருத்தி இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
  • சென்னை – வண்டலூரில் உள்ள மிருகக் காட்சிசாலை பற்றிய விவரங்களை www.aazoopark.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
  • இயற்பியலுக்கான நோபல் பரிசினை 2009ஆம் ஆண்டு பெற்ற தமிழர் வெங்கட ராமகிஷ்ணனுக்கு இங்கிலாந்து நாட்டின் உயரிய சாதனையாளர் (சர்) விருது வழங்கப்பட உள்ளது.
  • மியான்மர் நாட்டில் ஏப்ரல் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறப் போவதாகவும் அதில் ஆங் சான் சூகி போட்டியிடப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் தமிழக சிலம்பாட்ட வீரர் மதன்ராஜ் பல்வேறு பிரிவுகளில் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
  • எலிகளின் ஜெர்ம் செல்களிலிருந்து எலிகளின் விந்தணுவை உருவாக்கி ஜெர்மனியில் உள்ள முயன்ஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீபன் ஸ்கலாட் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
  • விரல் ரேகை, கண்ணின் கருவிழி பதிவுடன் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட உள்ளதால் தற்போதுள்ளவற்றை ஓராண்டு நீடிப்பு செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ரகுபிரசாத் (பெங்களூர்) கள நடுவராகவும், கிளாடியஸ் டிசால்ஸ் (மும்பை) நடுவராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
  • சென்னையில் நடைபெற்ற உலக ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ், டிப்சரேவிச் ஜோடி வெற்றி பெற்றது.
  • 2011ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *