Skip to content
- உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்பளிக்கும் மூலம்.
- மக்கள் இன்பமான வாழ்க்கை வாழவேண்டுமா? முதலில் மதங்களை ஒழித்துக் கட்டுங்கள்.
- மனிதன் என்பதற்கு மேலான எந்தக் கவுரவமும் இல்லை.
- நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாகிறது.
- உன்னால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்புகிறாயோ அதைத் தீவிரமாகச் செய்து முடிக்க முயற்சி செய். அதுவே வெற்றி பெற உற்ற வழி.
- பிழையை எடுத்துக் காட்டாமல் விடுவதானது. அறிவுத் துறையிலே ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகும்.
- தலைவணங்குவதையும் கெஞ்சுவதையும் நான் பெரிதும் வெறுக்கிறேன்.
- மிகப்பெரிய தோல்வியை விடவும் மிகப்பெரும் வெற்றிக்கே நாம் மிகவும் அஞ்ச வேண்டும்.
- மதம் மக்களுக்கு அபின்.
- விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.
- உலகாயதத்தை மனிதனின் மனம் கிரகித்து அதனைச் சிந்தனை வடிவமாக மாற்றுவது தான் எண்ணம் ஆகும்.
- ஒருவன் தனக்காக தன்னுடைய வாழ்க்கைக்காக உழைக்கும்போது தான் அசலான மனிதனாகிறான்.
- நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் நமது வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெருஞ்செல்வமாகும்.
- மக்களே கலை, இலக்கியம், மொழி ஆகிய அனைத்துக்கும் வித்தும் வீரியமும் சத்தும் சாரமுமாய் இருக்கிறார்கள். அவர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள்.
- நமக்கு முந்தைய தலைமுறை தத்துவ தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால் தத்துவ ஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவதுதான்.
- உள்நாட்டில் பல வகுப்பினரிடையே உள்ள வர்க்கப் பகைமை மறைகிற அளவை பொறுத்து. நாடுகளுக்கிடையே உள்ள பகைமையும் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
- மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.