12.4.2022 முதல் 26.4.2022 வரை
12.4.22 – பாக். புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு
12.4.22 – எரிசக்தி, பருவநிலை தர வரிசையில் தமிழ்நாடு முதலிடம்.
12.4.22 – மத்திய பல்கலை. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.
12.4.22 – ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை: ம.பி.யில் 77 பேர் கைது.
13.4.22 – ‘சமபந்தி போஜனம்’ இனி ‘சமத்துவ விருந்து’ என அழைக்கப்படும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் முதல்வர்.
14.4.22 – அம்பேத்கர் பிறந்த தினம் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் முதலமைச்சர் அறிவிப்பு.
14.4.22 – கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் எம்.பி.க்கள் பரிந்துரை ரத்து.
15.4.22 – ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு.
15.4.22 – ‘நீட்’ தேர்வு தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்ப வேண்டும் முதலமைச்சர் ஆளுநருக்குக் கடிதம்.
15.4.22 – உ.பி. முஸ்லிம் பெண்களை பலாத்காரம் செய்வதாக மிரட்டிய துறவி கைது.
16.4.22 – காவியை அவமதித்தால் கடுமையான பின் விளைவுகள்: ஜேஎன்யூ மாணவர்களுக்கு ஹிந்து சேனை எச்சரிக்கை.
16.4.22 – இலங்கை: ரேஷன் முறையில் பெட்ரோல் விற்பனை.
17.4.22 – உ.பி.யில் 11 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை. இருவருக்கு 21 ஆண்டுகள் சிறை.
17.4.22 – மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நெரிசலில் சிக்கி 2 பேர் பலி.
17.4.22 – ராமேஸ்வரத்தில் 108அடி உயர ஹனுமன் சிலை அமைக்கப்படும் – மோடி தகவல்.
18.4.22 – ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் நடந்த ஊர்வலத்தில் கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு.
18.4.22 – எல்.அய்.சி.யில் 20% அந்நிய நேரடி முதலீட்டுக்கு சட்டத் திருத்தம் – மத்திய அரசு.
18.4.22 – கருநாடகம்: ஹூப்ளியில் சமூக ஊடகப் பதிவால் வன்முறை.
18.4.22 – மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேச்சு.
19.4.22 – யு.பி.எஸ்.சி. தலைவராக ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர் நியமனம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
20.4.22 – குற்றவியல் அடையாள நடைமுறை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.
20.4.22 – இந்திய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இணை பட்டங்களை வழங்கலாம் – யுஜிசி அனுமதி.
20.4.22 – கிரிப்டோ கரன்சி பயன்பாட்டுக்கு சர்வதேச ஒழுங்குமுறைச் சட்டம் – நிர்மலா சீதாராமன்.
21.4.22 – கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை – முதலமைச்சர் விளக்கம்.
21.4.22 – மக்கள் மனங்களில் பிரதமர் மோடி – கே.பாக்யராஜ்
22.4.22 – தேசிய பங்குச் சந்தை முறைகேடு – சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு எதிராக சி.பி.அய். குற்றப் பத்திரிகை தாக்கல்.
22.4.22 – தேர்தல் நன்கொடை மூலம் பாஜக பெற்ற தொகை ரூ.212 கோடி.
23.4.22 – பாகிஸ்தானில் மேற்கொள்ளும் உயர்கல்வி செல்லாது: யுஜிசி
23.4.22 – நிதிஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் ராஜிநாமா.
23.4.22 – ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு.
24.4.22 – ஸ்ரீவிஜயேந்திரரை விமர்சித்த நபரை கைது செய்ய வேண்டும் – பிராமண ஸமாஜம் வேண்டுகோள்.
24.4.22 – முதலமைச்சர் ஸ்டாலினை மனதாரப் பாராட்டுகிறேன் – உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா பெருமிதம்.
24.4.22 – மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக புகார் இந்து மகா சபா மாநில தலைவர் கைது.
25.4.22 – முஸ்லிம் அரசுகளின் எழுச்சி பற்றிய பாடல்களை நீக்கியது சிபிஎஸ்இ.
25.4.22 – பிரிவினைவாத சதிக்கு தமிழர்கள் பலியாகக் கூடாது முதலமைச்சர்.
25.4.22 – 143 பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்கிறது மாநில அரசுகளிடம் கருத்துக் கேட்பு.
25.4.22 – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான மசோதாக்கள் விவாதிக்கப்படாமலேயே நிறைவேற்றம் – பினோய் விஸ்வம் எம்.பி. புகார்.
26.4.22 – தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது. அதிமுக வெளிநடப்பு.
26.4.22 – இமாச்சலில் பொது சிவில் சட்டம் – முதல்வர் ஜெய்ராம் அறிவிப்பு.
26.4.22 – ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் 3ஆவது இடத்தில் இந்தியா.
26.4.22 – உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தில் கவுதம் அதானி.ஸீ
தொகுப்பு: சந்தோஷ்
Leave a Reply