சரவணா இராசேந்திரன்
15 ஜூலை 2018 அன்று அமெரிக்க புலனாய்வுத் துறை பயங்கரவாத அமைப்புகள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் மத பயங்கரவாத அமைப்புகள் என்று குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க உளவு அமைப்பு ஆண்டுதோறும் உலக உண்மைத் தகவல்நூல் என்ற அறிக்கையை வெளியிடுகிறது.
இதில் பல்வேறு நாடுகளின் வரலாறு, அங்குச் செயல்படும் அமைப்புகள், மத அமைப்புகள், அரசியல் அமைப்புகள், மக்கள், அரசுகள், கட்சிகள், பொருளாதாரம், எரிசக்தி, புவியியல், தகவல்தொடர்பு, போக்குவரத்து, ராணுவம் உள்ளிட்ட 267 நாடுகள் தொடர்-பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த வேர்ல்டு பேக்ட் புக், கடந்த 1962-ஆம் ஆண்டில் இருந்து அச்சிடப்பட்டு வந்தாலும், கடந்த 1975ஆ-ம் ஆண்டில் இருந்தே மக்களின் பார்வைக்கு வந்தது. அமெரிக்க எம்பிக்களுக்கு உதவுவதற்காக இந்த நூல் அச்சிடப்படுகிறது.
அந்த வகையில், இந்தியாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி), பஜ்ரங் தள் ஆகியவை மதரீதியான தீவிரவாத அமைப்புகள் எனத் தெரிவித்துள்ளது.
அதேசமயம், அரசியல் ரீதியாக பின்புலத்தில் இருந்து பல்வேறு நெருக்கடிகளை அரசுக்கு அளிக்கும் குழுக்கள், நேரடி அரசியலில் ஈடுபடாத அமைப்புகள் என்ற அடிப்படையில், ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பட்டியலிட்டுள்ளது.
இது குறித்து பாஜகவின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் சாம்தேவ் கூறுகையில், நாங்கள் அமெரிக்க சிஅய்ஏவின் அறிக்கையை முற்றிலும் நிராகரிக்கிறோம். பஜ்ரங் தளம், விஎச்பி ஆகியவை தேசியவாத அமைப்புகள் என்பது மக்களுக்குத் தெரியும். விரைவில் சிஅய்ஏ மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்துத்வா அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக ஆட்சிக்கு வருவதற்கு ஹிந்துத்துவ சிறு சிறு அமைப்புகள், கல்வி அறிவு குறைந்த வடமாநிலங்களில் மதவெறுப்பைத் தூண்டுவதே காரணம். ஹிந்துத்துவ அமைப்பினர் வன்முறைக்கான பாதை அமைக்க, அதில் பாஜக பயணம் செய்து இலக்கை அடையும் என்பதற்கு பெரிய எடுத்துக்காட்டாக பாபர் மசூதி இடிப்பைக் கூறலாம்.
அதன் பிறகான 1992ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு சில நாள்களுக்கு முன்பு பஜ்ரங் தள் அமைப்பும் விஷ்வ ஹிந்து பரிஷத்தும் அந்த அமைப்பினரிடையே திரிசூலம் வழங்கியது. ஊர் ஊராய்ச் சென்று அங்குள்ள பள்ளிகளில் கூட்டங்களை நடத்தி மாணவர்-களிடையே வெறுப்பை விதைத்தது. இஸ்லாமியர்-களுக்கு எதிராக நாம் ஆயுதம் எடுப்பதில் தவறில்லை என்று விசமப்பரப்புரை செய்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை அதனைத் தொடர்ந்து டில்லியில் நடந்த பெருங் கலவரங்களுக்கு வித்திட்டது ஹிந்துத்துவ அமைப்புகள் 2020 பிப்ரவரி 23 அன்று, 20-_25 பேர் கொண்ட ஒரு குழு, துப்பாக்கிகள், திரிசூலங்கள், கைகளில் கம்புகளுடன் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தது.
அந்தக் குழுவிற்கு தலைமை தாங்கிய கபில் மிஸ்ரா என்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர், “நீங்கள் கம்புகளை கத்திகளைக் கையில் எடுங்கள்! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நீண்ட நேரம் கம்புகளால் ஒலி எழுப்புங்கள்! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
வாள்கள் மோதும் போது அதிலிருந்து நெருப்புப் பொறி பறக்க வேண்டும், பயப்படாதீர்கள்! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
உங்கள் கம்புகள் இஸ்லாமியர்களைத் தாக்கட்டும் தயங்க வேண்டாம் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்றார். அங்கே கூட்டத்தில் இருந்தவர்களிடம் துப்பாக்கிகள், வாள், திரிசூலம், கம்புகள், கற்கள், பாட்டில்கள் போன்றவை இருந்தன.
இதற்குப் பிறகு, கபில் மிஸ்ரா கூறினார்- இந்த முல்லாக்கள், முன்பு சிஏஏ, -என்ஆர்சி (சிகிகி, ழிஸிசி) பற்றி எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்போது அவர்கள் இடஒதுக்கீட்டிற்காக ஆர்பாட்டம் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்,” என்று கூறினார், இதன் தொடர்ச்சிதான் டில்லி கலவரம்.
ஒவ்வொரு கலவரத்திற்கும் முன்பாக ஆயுதங் களைக் கொடுத்து வன்முறையில் இறங்கத் தூண்டுகிறார்கள். அதுவும் காவல்துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு “ஜெய் சிறீராம்” என்று கூச்சலிடுகின்றனர். இதுதான் வடக்கின் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பதவிகளிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை நியமித்து விட்டது. இதுதான் வன்முறையில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு தற்காப்புக்காக எதிர்த்த இஸ்லாமியர் களின் வாழ்விடங்கள் குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் தலைநகர் டில்லியில் இடிக்கப்பட்டதற்குக் காரணமாக உள்ளது.
டில்லி ஜஹாங்கீர்புரியில் வீடுகளை இடிப்பதற்கு அரியானா மாநிலத்தில் இருந்து ஒரே நாள் இரவில் டில்லி மாநகராட்சியால் 170 புல்டோசர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. முதல் நாள் இரவு நோட்டீஸ் கொடுத்து மறுநாள் காலை வீடுகளை இடிப்பதும் உச்சநீதிமன்ற தடையாணை வந்தும் உயரதிகாரிகள் கூறினால் நிறுத்துவோம் என்று கூறி வீடுகளை இடிக்கும் பணியை நிறுத்தாமல் காவல்துறை அதிகாரிகளின் துணையோடு நடத்தினர்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை அசாம் மாநிலம் கவுஹாத்தியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது, இதில் அம்மாநிலத்தில் முக்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பிரமுகர்கள் கூட்டத்தில் உறுதி மொழி எடுத்தனர், அதில் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கொலை செய்ய உங்களுக்கு திரிசூலம் தருகிறோம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், வங்க தேசத்தில் உள்ள ஹிந்துக்களைப் பாதுகாக்க அவர்களுக்கு திரிசூலம் தருவோம் என்று கூறியுள்ளனர்.
கருநாடகாவில் துவங்கிய இஸ்லாமியர் வெறுப்பு வன்முறையாக மாறி மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பிகார், குஜராத், ஹரியானா, என பாஜக ஆளும் மாநிலம் முழுவதும் பரவியது தலைநகர் டில்லியில் பஜ்ரங்தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அசாம் மாநில தலைநகர் கவுஹாத்தியில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுக்கூட்டத்தில் அனைவருக்கும் திரிசூலம் வழங்கப்பட்டது, திரிசூலம் வழங்கிய பிறகு உறுதிமொழி ஏற்கப்பட்டது, அந்த உறுதிமொழியில் கடுமையான இஸ்லாமிய எதிர்ப்பு வெளிப்பட்டது.
அவர்கள் எடுத்து உறுதிமொழியில் உள்ளதாவது, “நாங்கள் வீரர்கள், வெற்றி பெறுவோம், துர்க்காதேவி, சண்டிகா தேவி, பகவான் சங்கர், இவர்களின் கைகளில் இருக்கும் திரிசூலத்தை எங்கள் கைகளில் ஏந்தி சபதம் எடுக்கிறோம். அரசுப் பதவியில் உள்ள 50 லட்சம் (வங்கதேசத்தில் இருந்து வந்த) முஸ்லிம்களை விரட்டி அடிப்போம். இங்கு வாழும் 2 கோடி முஸ்லிம்களை விரட்டவே அசாமிலுள்ள 5 லட்சம் ஹிந்து இளைஞர்-களின் கைகளில் திரிசூலம் ஏந்தியுள்ளோம்.
அசாமை முஸ்லிம் இல்லாத பகுதியாக மாற்றி அவர்களை வீரர்களாக மாற்றுவோம். பங்களாதேஷ் நாட்டில் இருக்கும் ஹிந்துக்களையும் காப்பாற்ற சூளுரைப்போம். இதற்காக யார் குறுக்கே வந்தாலும் ஹிந்துக்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்து ஹிந்து தேசத்தைக் காப்பாற்ற முன்வருவோம் என்று சபதம் ஏற்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அசாம் மாநிலத்தை ஆளும் பாஜகவின் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். சில காவல்துறை உயரதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை விதைகளைத் தூவிவருகின்றனர் இதனை வைத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அறுவடை செய்யக் காத்திருக்-கின்றனர்.ஸீ