பூமியில் ஒரு சூரியன்
செயற்கைச் சூரியன் என்றழைக்கப்படும் டோகாமாக் சீன அணு உலை 70மில்லியன் செல்சியஸ் டிகிரி வெப்பத்தில் 1056 நொடிகள் இயங்கி சாதனை புரிந்துள்ளது. இந்த வெப்ப நிலையில் சூரியனில் டிட்டீரியம் எனும் அணு சேர்க்கை ஏற்பட்டு அளவிறந்த ஆற்றல் உண்டாகின்றது. இதைப்போன்றே கடலிலிருந்து டிட்டீரியம் அணுக்களைப் பயன்படுத்தி பூமியிலும் மாசற்ற ஆற்றல் உண்டாக்கலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
கொசு அழிப்பில் மரபணு தொழில் நுணுக்கம்
டெங்கு, ஜிக்கா போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களை அழிப்பதற்கு அமெரிக்க நிறுவனம் ‘ஆக்சிடெக்’ என்னும் புதிய முறை ஒன்றைக் கண்டறிந்துள்ளது. இந்த முறையில் ஆண்கொசுக்கள் மரபணு மாற்றம் செய்யப்படுகின்றன. பின் அவை பெண் கொசுக்களுடன் இனப் பெருக்கம் செய்யும்போது முட்டைக்குள் புகும் ஒரு மரபணுவானது, பெண்கொசுக்கள் வளர்ந்து மனிதர்களைக் கடிக்கு முன் அவற்றை அழித்துவிடுகின்றன. இனப் பெருக்கத்தில் பிறக்கும் ஆண் கொசுக்கள் அழியாமல் வளர்ந்து இன்னும் பல பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்கின்றன. இவ்வாறு இந்தக் கொசு இனம் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிவிடுகிறது.
துணுக்குகள்
= ஜப்பானில் உள்ள மிகப் பெரிய நண்டுகள் 4 மீட்டர் நீளம் கொண்டவை.
= வண்ணத்துப்பூச்சியின் ஆயுட்காலம் ஒரு வார காலம் மட்டுமே ஆகும்.
கருப்பு மரபணுக்கள்
நமது மரபணுக்களுக்கு வெளியே காணப்படும் டிஎன்ஏ கருப்பு மரபணு எனப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் அண்மையில் சிசோபெர்னியா மற்றும் பைபோலார் போன்ற மனச்சிதைவு நோய்களுக்குக் காரணமான புரதங்களுக்கான பதிவுகள் கொண்ட வளர்ச்சியடைந்த பகுதிகளைக் கண்டறிந்துள்ளார்கள். இந்தப் புரதங்களை உயிரியல் குறியீடுகளாகப் பயன்படுத்தி இரண்டு நோய்களையும் வேறுபடுத்தவும் நோயாளிகளில் எவர் அதிக மனச்சிதைவுக்கு ஆளாவார்கள் என்பதையும் காணலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.