13.3.2022 முதல் 26.3.2022 வரை
13.3.22 கடந்த 40 ஆண்டில் இல்லாத அளவுக்கு பிஃஎப் வட்டி விகிதம் 8.1% ஆக குறைப்பு.
14.3.22 உ.பி. புதிய எம்.எல்.ஏ.க்களில் 51 சதவிகிதத்தினர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
14.3.22 இந்தியா குறித்த உண்மை புத்தகம் வெளியிட ஆர்.எஸ்.எஸ். முடிவு.
15.3.22 பங்குச்சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாள் காவல் – கோர்ட் உத்தரவு
15.3.22 12-14 வயது சிறுவர்களுக்கு நாளை முதல் கரோனா தடுப்பூசி – ஒன்றிய அரசு
15.3.22 மாணவர்களின் ஜாதி விவரங்கள் பதிவு ஏன்? அமைச்சர் விளக்கம்
16.3.22 வகுப்பறைகளில் ஹிஜாப் தடை செல்லும் – கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
16.3.22 மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
16.3.22 ‘நீட்’ விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் – கவர்னர் உறுதி.
17.3.22 மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர் களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் அனுமதி
17.3.22 சீர்காழியில் சாமி சிலைகளை கருவறையில் பதுக்கிய கோயில் குருக்கள் கைது.
17.3.22 புடின் போர்க் குற்றவாளி – அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்.
18.3.22 4 ஆண்டுகால இளநிலை படிப்பை முடித்த மாணவர்கள் பிஎச்.டி.யில் சேரலாம் – யுஜிசி அறிவிப்பு
18.3.22 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு தள்ளி வைப்பு
19.3.22 தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு மாதம் ரூ.1000 – நிதியமைச்சர் அறிவிப்பு
19.3.22 21 மொழிகளில் பெரியார் சிந்தனை தொகுப்புகள் மொழிபெயர்ப்பு – பட்ஜெட்டில் நிதி
19.3.22 பள்ளிப் பாடத் திட்டத்தில் பகவத் கீதை – கருநாடக அரசு ஆலோசனை
20.3.22 வேளாண் துறைக்கு ரூ.33,007 கோடி நிதி ஒதுக்கீடு
20.3.22 நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் – முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம்.
21.3.22 தமிழ்வழிக் கல்வியில் மருத்துவப் படிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
21.3.22 ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையில் 5 ஆண்டுகளில் ரூ.927 அரசிடம் திருப்பி ஒப்படைப்பு – தகவல் உரிமை சட்டத்தில் தகவல்.
22.3.22 மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியது ஏன்? – முதலமைச்சர் விளக்கம்.
22.3.22 ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.
22.3.22 ஹிஜாப் விவகாரத்தால் தேர்வைப் புறக்கணித்த முஸ்லிம் மாணவிகளுக்கு மறுதேர்வு கிடையாது – கருநாடக அரசு
23.3.22 சட்டப் பேரவையில் முதல்முறையாக பெண் துபாஷி நியமனம்.
23.3.22 கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் அரியானா பேரவையில் நிறைவேற்றம்
24.3.22 முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புப் பிரச்சினைக்கு புதிய அணையே நிரந்தரத் தீர்வு கோர்ட்டில் கேரளா வாதம்.
24.3.22 இளநிலைப் படிப்பு பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் – அமைச்சர் பொன்முடி
25.3.22 தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
25.3.22 மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கருநாடக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டது.
25.3.22 ஹிஜாப் மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே விசாரிக்க முடியாது – உச்சநீதிமன்றம் மறுப்பு
25.3.22 அய்பிசி, சிஆர்பிசி சட்டங்களில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு முடிவு மாநில அரசுகளிடம் ஆலோசனை.
26.3.22 வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு நிவாரணம் – ஒன்றிய அரசு
26.3.22 கிறிஸ்துவ மிஷனரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வாரியம் கோரும் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்
26.3.22 ஆக்கிரமிப்பில் புதிய கோவில்: எந்தக் கடவுளும் கேட்டதில்லை! – சென்னை உயர்நீதிமன்றம்.
தொகுப்பு: சந்தோஷ்