எடைக்குறைப்பில் ஈடுபடுபவர்கள் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகளில் கேரட், பீன்ஸ் மற்றும் பயறு வகைகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இது கலோரி மற்றும் கார்போஹைட்ரேட்டை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடியது.
ஆரஞ்சு, மாதுளை, கொய்யாப் பழம் மற்றும் ஆப்பிள் போன்ற கலோரி குறைவாக இருக்கும் பழவகைகளில் புரதம் மற்றும் தாதுக்கள் இருப்பதால், அவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல், ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், நோய்களைத் தடுப்பதற்கும் உதவுகின்றன.
விலை மலிவான கீரைகளில் உடல் எடையைக் குறைப்பதற்கான சத்துக்கள் உள்ளன. அவற்றை தினசரி உணவில் சேர்க்கும்போது கால்சியம் மற்றும் பொட்டாசியம் உடலில் அதிகரிக்கிறது.
உடல் எடையைக் குறைக்க உதவும் மசாலாப் பொருட்களான வெந்தயம், மஞ்சள், மிளகு, லவங்கப்பட்டை, இஞ்சி, குடைமிளகாய், சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மசாலாப் பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்.
அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் வேகவைத்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வறுத்த மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
காலையில் காபிக்கு பதில் புத்துணர்ச்சியூட்டும் மூலிகை தேநீர் குடிக்கலாம். லெமன் டீ, கிரீன் டீ, இஞ்சி டீ, சீரக தேநீர், செம்பருத்தி தேநீர் மற்றும் மிளகுக்கீரை தேநீர் ஆகியவற்றை தாராளமாகப் பருகலாம்.
தயிரில் அதிகமான கலோரி இல்லாததால், காலை உணவுக்கு 3 கப் தயிர் சாப்பிட்டாலே உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
செல் இயக்கத்தின் ஒருங்கிணைந்த மாதிரி
இன்று செல் மாதிரிகளை உருவாக்கும் முறையில் ஒரு குறிப்பிட்ட உயிரியல் இயக்கம் மட்டுமே கவனப்படுத்தப்படுகிறது. எனவே, ஒவ்வொரு முன்மாதிரியும் செல்லின் உள்ளே நடக்கும் பல்வேறு சிக்கலான இயக்கங்களில் ஒரு பகுதியை மட்டுமே படம் பிடிக்க இயலும். பல்வேறு வகைப்பட்ட உயிரியல் முன்மாதிரிகளை இணைத்து ஒற்றைக் கணிதச் சட்டகமாக மாற்றினால் செல் கட்டமைப்பையும் இயக்கத்தையும் மேலும் துல்லியமாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள முடியும். இப்போது ஷாங்காய் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்களும் மற்றும் வேறு சில ஆய்வாளர்களும் இணைந்து வெவ்வேறு முன்மாதிரிகளை ஒருங்கிணைக்கும் வழி முறையைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத முன்மாதிரிகளை ஒன்றுகூட்டி சுமுகமான முறையில் இணைத்து, துல்லியமானதும் விரிவானதுமான ‘மெட்டா மாடல்’ எனும் செல் வரைபடத்தை உருவக்கியுள்ளார்கள்.