நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா?
தந்தை பெரியார் கேட்கும் இந்தக் கேள்விக்கு, பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், சைடுநவீனத்துவம், அப்-நவீனத்துவம், பாட்டம்-நவீனத்துவம் பேசும் இலக்கியவாதிகள்தான் பதில் சொல்லணும்.
பரணீதரன் கலியபெருமாள் டிசம்பர் 20, 2011 மாலை 4:41 மணி
பகவத்கீதைய தேசியநூலா அறிவிக்கணுமாம் பிஜேபிக்கு. அதுக்கு பூணூலையே தேசிய நூலா அறிவிச்சிட்டா மொத்தமா புண்ணிய பூமியாக்கிடலாம்.
அதிஷா வினோ டிசம்பர் 20, 2011 இரவு 10:02 மணி
கிருஷ்ணன் செய்த லீலைகளாகச் சொல்லப்படும் அனைத்துக் காரியங்களுமே இன்று சட்டப்படி தப்பு. அப்படியிருக்க அவன் போதனையைச் சட்டம் தடை செய்யாம என்ன பண்ணும்? ரஷ்யா என்ன இந்தியாவா?
டான் அசோக் டிசம்பர் 20, 2011 இரவு 10:02 மணி
தமிழ் அறிஞர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை அதிகரிப்பு …..!
ஒரே இரவில் ..செம்மொழி நூலகத்தை ..குப்பையில் வீசினர் ..!
(தொன்மையான புத்தகங்கள் 6 மாதமாக சீரழிந்து கிடக்கிறது )
இப்போது..! மொழியைக் கொன்று ..அறிஞர்களுக்குச் சலுகை ..!
விழிகளைப் பறித்துவிட்டு ..கண்களுக்குக் ..கண்ணாடி தானமா ?
பெரியார் தடி டிசம்பர் 24, 2011 காலை 11:34 மணி
கடவுள் ஆதாமையும், ஏவாளையும் படைத்தார், அதிலிருந்து மனித இனம் பல்கிப்பெருகியது என்பதை உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அது உண்மையெனில் உலகில் அனைவரது ஜீன்களும், நிறம், உருவம் அனைத்தும் ஒத்துப்போக வேண்டுமே! நெடுநெடுவென உயரமாக சுருள்முடியுடன் பெருத்த உதடுகளுடன் ஒரு இனம் ஆப்ரிக்காவிலும், சப்பை மூக்குடன் குள்ளமாக ஒரு இனம் சீனா, ஜப்பானிலும், மாநிறமாக ஒரு இனம் இந்தியாவிலும், நீலக்கண்களுடன் வெள்ளையாக ஒரு இனம் அய்ரோப்பாவிலும், இன்னும் பலப்பல இனங்கள் உலகில் இருப்பது ஏன்? ஒருவேளை கடவுள் ஒவ்வொரு கண்டத்திலும் ஒரு ஒரு ஜோடி ஆதாம், ஏவாளைப் படைத்திருப்பாரோ!
ராஜேஷ் தீனா டிசம்பர் 11, 2011 இரவு 11:25 மணி
இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் மீண்டும் இணைக்க வேண்டும் – காங். எம்.பிக்கள் #முதல்ல கேரளாவ இந்தியாவோட இணையுங்க…#
செந்தில்குமார் டிசம்பர் 13, 2011 மாலை 2:25 மணி
இன்று ஒரு தகவல்
“கெட்டும் பட்டணம் சேர்” என்று எதற்காகச் சொன்னார்கள்? – பட்டணம் என்பது வேறுபட்ட கலாச்சாரங்களும், பழக்கவழக்கங்களும் உள்ள பலவகை மனிதர்கள் சேர்ந்து புழங்கும் இடம் என்பதால் கிராமத்தில் உள்ளது போல் “கட்டுமானம்” கிடையாது. கெட்டுப் போக நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் பிழைக்கும் வழி மிக மிக அதிகம்.!!!
உதயகுமார் டிசம்பர் 23, 2011 காலை 7:46 மணி