பிப்ரவரி 25 முதல் மார்ச் 12 வரை
25.2.2022 பெரியார் பெயரல்ல! கருத்தியல் சமுதாய விழிப்புணர்வு பற்றிப் பேசும் சிறுவர்களுக்கு முதல்வர் வாழ்த்து.
26.2.2022 தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிருவாக அதிகாரி கைது.
27.2.2022 கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்.
28.2.2022 தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ பாகம்-1 நூல் வெளியீட்டு விழா.
28.2.2022 இந்தியாவில் இருக்கும் தமிழ்மொழி உலகின் பழமையான மொழி – மோடி பெருமிதம்.
1.3.2022 தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது – முதல்வர் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல்காந்தி பேச்சு.
1.3.2022 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உருவாக்க நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
1.3.2022 சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடச் சென்ற 63 பேர் கைது.
2.3.2022 முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – பெரியார் திடலில் மரியாதை செலுத்தினார்.
2.3.2022 சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு.
3.3.2022 ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு புகார் ஒரு நபர் விசாரணைக் குழு அமைப்பு – தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு.
3.3.2022 திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் ரூ.120 கோடி.
4.3.2022 உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க சிறப்புக் குழு – முதலமைச்சர் அறிவிப்பு.
4.3.2022 கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அறிவிப்புப் பலகை வைக்க உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு
4.3.2022 சென்னையின் முதல் தலித்பெண் மேயராக தி.மு.க.வின் ஆர்.பிரியா தேர்வாகிறார்.
5.3.2022 உக்ரைன் -ரசியா போர் அய்.நா. மனித உரிமை கவுன்சில் விசாரணை -ஓட்டெடுப்பைப் புறக்கணித்தது இந்தியா.
5.3.2022 ஒடிசா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி கொண்டுவர தமிழ்நாடு மின்வாரியம் முடிவு.
6.3.2022 அரசு பொது நூலகங்களுக்கு நாளிதழ்கள், இதழ்கள் வாங்க குழு – அரசாணை வெளியீடு.
6.3.2022 கோகுல்ராஜ் ஜாதி ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் — சிறப்பு நீதிமன்றம்
7.3.2022 சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் – முத்தரசன் வலியுறுத்தல்.
7.3.2022 தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிருவாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது.
8.3.2022 உக்ரைனில் படித்துவந்த மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் படிப்பைத் தொடர நடவடிக்கை – முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம்.
8.3.2022 சுடுகாட்டுப் பாதைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலையில் குடியேறிய அருந்ததிய மக்கள் போராட்டம் வெற்றி.
9.3.2022 கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் 10 பேருக்கு சாகும்வரை சிறை – மதுரை சிறப்பு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு.
9.3.2022 மேகதாது அணைகட்டும் திட்டத்தைத் தடுக்க சட்டப்படி நடவடிக்கை – அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.
10.3.2022 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன் – உச்சநீதிமன்றம் உத்தரவு.
10.3.2022 பங்குச் சந்தையில் இந்த மாதிரி முறைகேடு நடந்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள் – நீதிமன்ற நீதிபதி கேள்வி.
11.3.2022 அணைகள் பாதுகாப்புச் சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் ஒரு போதும் பறிக்கப்படாது – உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை
11.3.2022 5 மாநிலத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி.
12.3.2022 கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
12.3.2022 அரசு மருத்துவமனைகளில் இனி ஒப்பந்த முறை பணி நியமனம் இருக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
12.3.2022 உயர்கல்வியை மாற்றி அமைக்கப் பாடுபட வேண்டும் – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு.ஸீ
தொகுப்பு: சந்தோஷ்
Leave a Reply