தண்ணீர் ஒரு பிரச்சினை அல்ல

ஜனவரி 01-15

வரலாறு, ஒரே ஆட்சியின் கீழ் தமிழகமும் கேரளமும் சேர்ந்து இருந்ததைச் சொல்கிறது. பழந்தமிழில் இருந்து பிரிந்து வளர்ந்த ஒரு கிளைதான் மலையாளம். கேரளத்தின் அனேகப் பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களிலும் குடியேறிய தமிழர்கள் வசிக்கிறார்கள். அவ்வாறே தமிழகமும் இலட்சக்கணக்கான மலையாளி களுக்கு வாழ்வளிக்கிறது. தமிழர்களும் மலையாளி களும் நல்ல அண்டை வீட்டுக்காரர்களாகவே இதுவரை நடந்துகொண்டு இருக்கிறோம். கேரளத்தில் 40 நதிகள் இருக்கின்றன. அவற்றில் வெறுமனே 8 சதவிகித நீரைத்தான் கேரளம் பயன்படுத்துகிறது. மீதித் தண்ணீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது. இதில் முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்திற் குச் செல்லும் நீரானது ஒரு பொருட்டே அல்ல. அதுவும் அந்த நீர்தான் கேரளத்திற்குத் தமிழகத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கான ஜீவநாடி என்பதைப் பெரும்பான்மையான மலையாளிகள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள். மலையாளிகள் உண்ணும் சோறும் குழம்புக்குக் காய்கறியும், தின்னும் பழமும், பூசை மலரும்… அவ்வளவு ஏன்… கறிவேப்பிலை கூட தமிழகத்தி லிருந்துதான் வருகிறது. உண்மையில் மலையாளி கள் தங்கள் எதிர்காலத்திற்காகச் செய்ய வேண்டியது தாங்கள் வீணாக்கும் 92 சதவிகிதத் தண்ணீரைத் தமிழகத்தில் உள்ள உழைப்பாளி களான விவசாயிகளுக்கு இன்னும் அதிக அளவு கொடுத்து அதற்குரிய நியாயமான விலையைப் பெறுவதும், தங்களிடம் இல்லாத அரிசி, காய்கறி, பழங்களைத் தரமானதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்க அவர்களிடமிருந்து உறுதி பெறுவதும்தான். இதை நானே பலமுறை பேசியும் எழுதியும் இருக்கிறேன்.
ஆக, தண்ணீர் இங்கு ஒரு பிரச்சினை அல்ல. மலையாளிகள் தண்ணீரைப் பிரச்சினையாகப் பார்த்தால் அது தவறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *