பெண் நீதிபதிகள்
எகிப்தில் நீதித்துறையில் பிரத்யேகமாக ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், பெண்கள் பல முறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப் பட்டுள்ளனர். இதனிடையே எகிப்து
அதிபர் அப்தெல் பத்தா அல் சிசி,
சில மாதங்களுக்கு முன், நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என அறிவித்ததை அடுத்து,
98 பெண் நீதிபதிகள் முறையான பயிற்சி பெற்று பதவியேற்றுள்ளனர்.
பெண் குழந்தைகள்
மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றை ராஜேந்திர சாய்னானி என்பவர் நடத்தி வருகிறார். இவருக்கு வாய் பேச முடியாத சகோதரி உள்ளார். அவருக்கு சமீபத்தில், பெண் குழந்தை பிறந்தது. மருமகள் பிறந்த சந்தோஷத்தில் அன்று தனது பெட்ரோல் நிலையத்திற்கு வந்த அத்தனை வாகன ஓட்டிகளுக்கும் இலவச பெட்ரோல்-டீசலை அளித் துள்ளார். இவரது கொண்டாட்டத்தை குடும்பத்தினரும் வரவேற்று ஆண் குழந்தை பிறக்கும் போது இருக்கும் அதே மகிழ்ச்சி, பெண் குழந்தை பிறக்கும் போதும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பார்ப்பனர் – பார்ப்பனரே!
பார்ப்பனர்கள் எந்த உயர்ந்த பதவி வகித்தாலும், அவர்களின் எண்ணமெல்லாம் இடஒதுக்கீட்டில் கைவைப்பதில்தான் இருக்கும். குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ‘இந்து’ ஏட்டின் விழா ஒன்றில் பங்கேற்க சென்னை வந்தபோது (4.9.1978) இடஒதுக்கீடு பற்றி கருத்துத் தெரிவித்தார்.
“சமுதாயத்தில் செய்யப்படும் உதவிகள் வகுப்பு அடிப்படையில் இருக்கக் கூடாது. இந்த ஆபத்தான போக்கை ஏற்கெனவே நாம் மேற் கொண்டு விட்டோம் என்று சொல்லுவதற்கு வருத்தப்படுகிறேன். வறுமையின்-அடிப்படையிலே எல்லோருக்கும் உதவிட வேண்டும். உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பதற்காக அவர்களை வறுமையில் விட்டு விடக்கூடாது’’ (‘தினமணி‘, 5.9.1978).
தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு _ நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டு 9ஆவது அட்டவணையில் இடம் பெறச் செய்யப்-பட்டது. அதில் கையொப்பம் போடும் இடத்தில் இருந்த குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா தெரிவித்த கருத்தென்ன?
“Although the quota system might have taken away posts from brahmins, no one could take away brahmin’s brain” (‘Indian Express’, 25.9.1994)
“இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிராமணர்களுக்கான இடங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிராமணர்களுக்-கான மூளையை எடுத்துக் கொள்ள முடியுமா?’’ என்று கேட்டவர்தான் இந்த நாட்டின் குடியரசுத் தலைவர். பதவியைவிட அவருடைய பார்ப்பனத்தனம் தான் மேலோங்கி நிற்கிறது. (வேண்டாம் வேண்டாம் _ அந்த மூளை எங்களுக்கு வேண்டாம் என்று சொன்னவர் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங்.)
– ‘விடுதலை’, 15.5.2021
சூடான குடிநீர் அவசியம்!
நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு, நம் உடலில் சில நொதிகளும் (Enzyme) அமிலங்களும் சுரக்கின்றன. எனவே, உணவு உண்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகே நீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
சாப்பிட்டு முடித்த பிறகு இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது. இளம் சூட்டில் நீர் அருந்துவதால், புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கலாம். சீனர்களும் ஜப்பானியர்களும் உணவு உண்ட பிறகு சூடாக கிரீன் டீ அல்லது வெதுவெதுப்பான நீர் அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
சூடான நீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு, கெட்ட கொழுப்புகள் சேர்வதும் தடுக்கப்படுகிறது.
நம்மில் பலரும் சாப்பிட்டு முடித்ததும் ஜில்லென்று தண்ணீர் பருகுவதை வழக்கமாகக் கொண்டிருப்போம். இது நமது உடலில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
இதய நோயாளிகள் சாப்பிடும்போது குளிர்ந்த தண்ணீரை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை மட்டுமே குடிக்க வேண்டும்.