பகுத்தறிவுப் பாடம் நடத்தும் பெரும்பணி
1928இல் பெரியார் தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் பேசுகிறார். அப்போது அவர் “பழக்கத்தையோ, வழக்கத்தையோ, மதத்தையோ, வேதத்தையோ கருதிக் கொண்டு பயப்பட்டு விடாதீர்கள்; காலதேச வர்த்தமானத்தைப் பாருங்கள். துருக்கியையும், ஆப்கானிஸ்தானத்தையும், சைனாவையும் பாருங்கள்! சைனாப் பெண்களுடைய காலுக்கு விடுதலை ஏற்பட்டு-விட்டது என்பதை நினையுங்கள்” என்று பேசுகிறார்.
இன்றைய இன்டெர்நெட் காலத்தில்கூட நம்மில் பலருக்கும் சீனாவில் Foot Binding என்ற கொடுமையான முறை இருந்தது தெரியவில்லை.
பெண்கள் அவர்கள் சிறுமிகளாக இருக்கும் போதே அவர்களது கால்விரல்கள் பாதங்களுக்கு அடியில் மடக்கி இறுகக் கட்டப்பட்டு பாதத்தின் நீளம் செயற்கை-யாகக் குறைக்கப்படும் முறையே Foot Binding. இப்படிப்பட்ட பாதங்கள் மிகவும் கவர்ச்சிகரமான பாதங்களாகக் கருதப்பட்டன.
இது உயர்குடி பெண்களுக்கு ஒரு பெருமையான முறையாக பத்தாம் நூற்றாண்டு வாக்கில் ஆரம்பித்து, பின்னர் அனைத்து பெண்களுக்கும் இது கட்டாயமாகியுள்ளது.
இம்முறை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும்பாலும் குறைந்து-விட்டது. இதைத்தான் தந்தை பெரியார் “சைனாப் பெண்களுடைய காலுக்கு விடுதலை ஏற்பட்டுவிட்டது” என்கிறார்.
மேலும் பெண் விடுதலைக்கு எடுத்துக் காட்டாக பெரியார் “ஆப்கானிஸ்தானைப் பாருங்கள்” என்கிறார்.
1928இல், அமானுல்லா கான் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் பெண் சுதந்திரம் உச்சத்தில் இருந்துள்ளது. இன்று மதவாதிகள் ஆட்சியில் அது அதல பாதாளத்தில் உள்ளது.
எனவே, மாற்றம் என்பது முற்போக்-காகவும் இருக்கலாம், பிற்போக்காகவும் இருக்கலாம் என்று வரலாறு நமக்குப் பாடம் நடத்துகிறது.
தாலிபான்கள் போல, சங்கிகள் தலையெடுத்து இங்கும் சனாதனம் தழைத்து மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களும் பெண்-களும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற கொடுமைகளை அனுபவிக்காமலிருக்க, பெற்ற பெயரளவிற்கான சுதந்திரத்தைப் பாதுகாத்து, நம் சமுதாயத்தை முழுமையான சமத்துவ, சுதந்திர, பகுத்தறிவுச் சமுதாயமாக மாற்ற முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து ஓரணியில் செயல்பட வேண்டும்.
தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடும் முட்டாள் சங்கிகளுக்கு பகுத்தறிவுப் பாடம் நடத்தும் பெரும்பணி நம் முன்னால் இருக்கிறது.
(‘வாட்ஸ் அப்’ வழியிலிருந்து)