ஒரு சீரான உணவுத் திட்டத்தின் அத்தியாவசிய உள்ளடக்கங்களில் ஒன்று நார்ச்சத்து. மேலும் அது உணவு செரிமானத்திலும் ஊட்டச்சத்துகளை உள்வாங்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
நம் உணவுத் திட்டத்தில் மிகக் குறைவான உள்ளடக்கமாக இருக்கக்கூடிய நார்ச்சத்து ஏராளமான நன்மைகளைத் தருகிறது.
நார்ச்சத்து உணவு என்பது ஒரு வகையான கார்போஹைட்ரேட்.
நார்ச்சத்து எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அது உணவின் எடையை அதிகரிக்கிறது, வயிறு நிரம்பிய உணர்வை நீடிக்கச் செய்கிறது, மலத்தின் திடத்தன்மையை அதிகரிக்கிறது,
பொதுவாக நார்சத்து உணவானது அதன் நீரில் கரையும் தன்மையைப் பொறுத்து கரையும் நார்ச்சத்து உணவு, கரையா நார்ச்சத்து உணவு என்று இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றது. ஆப்பிள், பீன்ஸ்,ஓட்ஸ், கிச்சிலி பழங்கள், சைலியம் ஆகியவற்றில் கரையும் நார்ச்சத்து உள்ளது.
காலிஃபிளவர், பச்சை பீன்ஸ் உள்ளிட்ட காய்களிலும் கரையா நார்ச்சத்து உள்ளது.
நார்ச்சத்தை அளிக்கும் இன்னொரு நல்ல உணவு இடுபொருள் பலதானியங்களை உள்ளடக்கிய மல்ட்டிக்ரெய்ன் ஆட்டா. இது கோதுமை, ஓட்ஸ், சைலியம் பட்டை, கொண்டைக் கடலை, மக்காச்சோளம், சோயா உள்ளிட்ட நார்ச்சத்தின் இயற்கையான மூலங்களை உள்ளடக்கியது. இது வெவ்வேறு தானியங்களின் ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து பயனை அளிக்கும் நன்மையை அளிக்கிறது. இது செரிமானத்துக்கு உதவுவதோடு அன்றாட உணவுத் திட்டத்தில் இருக்க வேண்டிய நார்ச்சத்து உள்ளடக்கத்தில் கணிசமான பங்களிக்கிறது.
நல்ல செரிமானத்தைத் தக்கவைக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உணவுத் திட்டத்தில் படிப்படியாக நார்ச்சத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்து உணவை உட்கொள்வது செரிமான அமைப்பை ஆரோக்கியத்துடன் பேணுவதற்கும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.
நம்முடைய இந்திய உணவுத் திட்டமானது பொதுவாக நார்ச்சத்து உணவின் இயற்கையான ஆதாரங்கள் பலவற்றை உள்ளடக்கியது. முழுமையாக தானியங்கள், ராகி, கேரட்,பீட்ரூட், முட்டைகோஸ், பட்டாணி, புரோக்கோலி, பீன்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் ஆகியவற்றோடு இந்தியப் பழங்களான ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா ஆகியவையும் நார்ச்சத்தின் ஆதாரங்கள். பாதாம், உலர் திராட்சை, வால்நட், வேர்க்கடலை, ஆளி விதை உள்ளிட்ட கொட்டைகளும் விதைகளும் கூட நார்ச்சத்தை உள்ளடக்கியவை.