காமராஜருக்குப் பெரியார் கொடுத்த தந்தி!
‘கேபிளான் என்று கூறப்பட்ட காமராசர் திட்டப்படி காங்கிரசில் மூத்த தலைவர்கள் ஆட்சிப் பதவியை விட்டு விலகி கட்சிப் பணிக்குச் செல்லுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த கு.காமராசர் பதவி விலகி அகில இந்திய அரசியலுக்குச் சென்றார். காங்கிரசின் அகில இந்தியத் தலைவராகவும் ஆனார். காமராசர் தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியை விட்டுச் சென்றது தந்தை பெரியாருக்குப் பிடிக்கவில்லை.
காமராசர் அவர்களுக்குத் தந்தி ஒன்றும் கொடுத்தார் -_ வாசகங்கள் வருமாறு:
“Either or your own Accord or on the Advice of others, your Resignation of Chief Ministership will be sucidal to Tamilians, Tamilnadu and Yourself.”
“தாங்களாகவோ அல்லது பிறரது ஆலோசனை காரணமாகவோ தமிழ்நாட்டு முதல் அமைச்சர் பதவியிலிருந்த தாங்கள் விலகியதானது – தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும், தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பானதாகும்’’ என்பதுதான் அந்தத் தந்தி.
தந்தை பெரியாரின் இந்தக் கணிப்பு சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி அப்படியே பொருந்தியது என்பதை நாடே கண்டது.