நூல்: பார்வைபெற
ஆசிரியர்: கவிஞர் கோ.கலைவேந்தர்
பதிப்பகம்: தேங்கனி பதிப்பகம்,
17, புதுநகர், குத்தாலம் – 609801 நாகப்பட்டினம் மாவட்டம்,
தொலைபேசி: 8940230310
பார்வை பெற…
மனிதநேயச் சிந்தனைகளையும், பகுத்தறிவுக் கருத்துகளையும், பொதுவுடைமைச் சிந்தனைகளையும், கவிதை வரிகளின் மூலம் கொண்டு செலுத்தும் அருமையான படைப்பு. ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘வாடிய பயிரைக் கண்டு வாடினேன்’ என்னும் தமிழர்தம் வாழ்வியல் பண்பாட்டு மரபுநிலை குறித்துச் சிந்திக்க வைக்கிறது. மானுட வாழ்வில் கொள்ள வேண்டியவை எவை, தள்ள வேண்டியவை எவை என்பன பற்றி அறிவுறுத்தும் கருத்துகள் அடங்கிய நூல். ஆதிக்க அதிகார வர்க்கக் கொடுமைகளையும், பாமரர்கள் படும் துன்பங்களையும் உணர்ச்சி பொங்கச் சித்தரிக்கும் கவிதைகளை உள்ளடக்கியுள்ள நூல். தமிழின் எதுகை, மோனை சொல்லாடல்களைக் கற்றுக் கொள்ள வைக்கும் ஓர் இலக்கணப் பாடநூலாக அமைந்துள்ளது. அறியாமை இருள் விலக்கி அறிவென்னும் ‘பார்வை பெற’ கவிஞர் கோ.கலைவேந்தன் உணர்ச்சி பொங்கிட வினாக் கணைகளைத் தொடுத்துள்ளார். அனைவரும் எளிதில் படித்துப் புரிந்து சிந்திக்க வைக்கும் சிறந்த நூலாகும்.
– பெரு.இளங்கோ