மஞ்சள் பலநூற்றாண்டுகளுக்கு மேலாக இந்திய துணைக் கண்டத்திலும், மேற்கு ஆசியாவிலும், பர்மா, இந்தோனேஷியா, சீனா ஆகிய நாடுகளிலும் தினசரி உணவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கிருமி எதிர்ப்பு, வீக்கத் தணிப்பு ஆகிய மருத்துவக் குணங்களும் உள்ளதாக அறியப்பட்டுள்ளன. அல்செமியர் எனும் மறதி நோய்க்கும் இது குணமளிக்கிறது என்கிறது. ஹெல்த்லைன்.காம் (www.healthline.com) இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் கட்டுரையாளர் டி.பாலசுப்ரமணியன்.
அவர் மேலும் கூறுவதாவது: அண்மையில் மும்பையைச் சேர்ந்த கே.எஸ்.பவார் என்கிற ஆய்வாளர் குழு கொரோனா நோயாளிகள் நாற்பது பேருக்கு சோதனை நடத்தியதில் கொரோனாவால் ஏற்படும் நோயின் தீவிரத்தையும் இறப்பையும் மஞ்சள் குறைக்கிறது என அறிந்துள்ளார்கள். கொரோனா நோயாளிகளுக்கு மஞ்சளும் பிப்பரின் என்கிற பொருளையும் கலந்து கொடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. நோயெதிர்ப்பு சக்திக்கு மஞ்சள் துணை புரிவது குறித்து இந்திய அறிவியல் கழகத்தை சேர்ந்த ஜி.பத்மனாபன் என்பவர் ஏற்கெனவே விரிவாக ஆய்வு செய்துள்ளார்.