உணவே மருந்து

செப்டம்பர் 16-30,2021

நன்மை பயக்கும் நாட்டுச் சர்க்கரை

*              நாட்டுச் சர்க்கரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி தூய்மையாக்கும்.

*              வெள்ளைச் சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்புகளை அதிகம் உண்டால், மலச் சிக்கல் ஏற்படும். நாட்டுச் சர்க்கரை குடலை வலுவடையச் செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.

*              கரும்புச் சாறு மற்றும் நாட்டுச் சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தினால் புற்றுநோய் பாதிப்பு குறையும்.

*             உடலில் ஏற்படும் தொற்றைத் தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.

*             நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் மற்றும் இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். நாட்டுச் சர்க்கரையைப்  பயன்படுத்துவதால் கொழுப்பு சேர்மானம் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.

*             வெள்ளைச் சர்க்கரையிலுள்ள ரசாயனங்கள், உடலில் இன்சுலின் சுரப்பைப் பாதித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்தும். நாட்டுச் சர்க்கரை இத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

 


நோயைத் தடுக்கும்  கேரட் சாறு

*            கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்த காய்கறி. ஒரு கப் கேரட் சாற்றின் எடை 236 கிராம் வரும். கேரட் சாறு குடிப்பதால் உடலுக்குக் கிடைக்கும் சத்துகளின் அளவு அதிகரிக்கும்.

*             நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு ஆழாக்கு கேரட் சாறு குடித்தால், உடலிலுள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும்.

*              கேரட் சாறு குடிப்பதன் மூலம் மனச் சோர்வில் இருந்து விடுபடலாம்.

*              இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சோர்ந்துள்ள இதயத் தசைகள் ஊக்கமடையும்.

*             இதிலுள்ள கரோட்டீனாய்டு சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்கும்.

*             கேரட் சாறு குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன், உடல் எடையும் சீராகப் பராமரிக்கப்படும்.

*             தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கேரட் சாறு குடித்து வந்தால் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடும் தடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *