முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
கே1: ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எல்லா மாநிலங்களும் வலியுறுத்த ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினால் என்ன?
— சங்கமித்திரன், மதுரை
ப1: இயல்பாகவே சூழ்நிலை அதனை நாளும் வலுவாக்கிக் கொண்டே வருகிறது. கொரோனா போன்ற பல காரணங்-களால் சாத்தியமில்லா-விட்டாலும் அது காலத்தின் கட்டாயமாகிறது! தமிழ்-நாட்டில் ஒருங்கிணைந்த முயற்சிகளை தாராளமாகச் செய்ய நம்மால் முடியும்.
கே2: பா.ஜ.கவின் ஆசீர்வாத யாத்திரை எதற்கு?
– மகிழ், சைதை
ப2: கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு திரைப்படத்தில் கூறுவார்: ‘ஆசி’ எனக்கு ‘வாதம்’ உனக்கு என்று நகைச்சுவையாக! நாளும் மக்கள் வதைபடுவதற்கும், மக்களின் சொத்துகள் விற்கப்படுவதற்கும், 40 ஆண்டுகால திட்டத்தை குத்தகை விடுவதற்கும் ஆசியா? வாதமா?
நல்ல நகைச்சுவை!
கே3: உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முதல் சட்டமன்ற உரை அவரது கொள்கைத் தெளிவைக் காட்டுவதாகக் கொள்ளலாமா?
– குமரகுருபரன், சேலம்
ப3: அதில் என்ன அய்யம்? ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதல் பேச்சுக்கான திராவிட மாடல் _ சிறப்புக்குரிய தயாரிப்புடன் கூடிய கருத்துப் பொழிவுகள்.
கே4: இலங்கைத் தமிழ் அகதிகளின் இன்னல் தீர என்ன செய்ய வேண்டும்?
– செந்தில்நாதன், பூண்டி
ப4: அவர்களுக்கு நம் குடியுரிமை வழங்க முழு முயற்சி செய்யவேண்டும்.
கே5: அரசு விழாக்களில் மதச் சடங்குகளைச் செய்வது தொடர்கிறதே! தடுக்க வேண்டாமா?
– ——- பெரியார் செல்வம், திருப்பூர்
ப5: தி.மு.க ஆட்சியையும் அ.தி.மு.க ஆட்சியையும் ஒன்றாக்கும் அருவருப்-பான கொள்கை நழுவல். உடனே நிறுத்திவிட வேண்டும். மதச் சார்பின்மையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு காப்பாற்ற விழிப்போடு செயல்பட வேண்டும்.
கே6: ஆகம விதிப்படி (காடிகாகாமம், காரணாகமம்) “ஸ்மார்த்த பிராமணர்-கள்’’ சிவன் கோயிலில் பூஜை செய்ய உரிமையில்லாதபோது, சிதம்பரம், இராமேஸ்வரம் போன்ற கோயில்களில் அவர்கள் பூஜை செய்வது ஆகமத்திற்கு எதிரானது என்று வழக்குத் தொடர முடியுமா?
– நாகராசன், நங்கநல்லூர்
ப6: நிச்சயம் தொடர முடியும் _ தொடர வேண்டும். உண்மையான பக்தர்களின் உடனடி வேலையாக அது அமைய வேண்டும். ஆகமம் காப்பாற்றப்பட பொய் அழுகை அழும் ஆகமப் பூச்சாண்டிகளின் முகமூடி அதன்மூலமே அகற்றப்படக் கூடும்.
கே7: பெரியார் தங்களுக்கு உந்துசக்தி என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ‘ட்விட்’ செய்துள்ளது பற்றித் தங்கள் கருத்தென்ன?
– தனராசு, வேலூர்
ப7: உண்மையை உள்ளத்திலிருந்து உரைத்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
கே8: முதலமைச்சரின் ஆணைக்குப் பின்னும் அலங்கார வரவேற்பு, உயிரிழப்பு -சரியா?
– ஜெயராமன், தஞ்சை
ப8: சட்டமன்றத்திலும் கண்டித்துள்ளார் நமது முதலமைச்சர். இனியாவது கண்டிப்பான நடைமுறைகளுடன், காலில் விழுவது தவிர்க்கப்பட்டது போல தவிர்க்கப்பட வேண்டியது முக்கியம்.
கே9: ‘நீட்’ ஒழிப்பில் அடுத்தகட்ட முயற்சி என்ன?
– முத்துராமன், பரமக்குடி
ப9: 1. தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய தீர்மான வடிவிலான சட்டம் இயற்றும் முயற்சி.
2. மக்கள் இயக்கமாக அதனைக் கட்டமைப்புச் செய்தால் நாடு தழுவிய அளவில் தமிழ்நாடே எழுச்சி பெறும் வகையில் பெரும் மக்கள் திரளை _- செயல்திறனை உருவாக்-குதல்.
3. இனத் துரோகிகளை அடையாளம் காட்டுதல்.