ஒரு வரிச் செய்திகள் (26.2.2021 முதல் 11.3.2021 வரை)

மார்ச் 16-31,2021

26.2.2021 –         அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு

26.2.2021 –         புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.

27.2.2021 –         தமிழ்நாட்டில் ஏப்ரல் 6இல் தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

27.2.2021 –         வன்னியர்களுக்காக தற்காலிகமாக 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு- சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்.

27.2.2021 –         கிரிக்கெட் அரங்கத்துக்கு மோடி பெயர்- சிவசேனை கண்டனம்.

28.2.2021 –         மூளைச்சாவு அடைந்த மதுரை வாலிபரின் இதயம் தானம் – 36 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்தது.

1.3.2021 –            வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு அமல் – மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.

1.3.2021 –            ஒரே முறை செலுத்தக் கூடிய கரோனா தடுப்பூசி – சீனா அறிமுகம்.

2.3.2021 –            சமையல் கேஸ் விலை ரூ.25 உயர்ந்து ரூ.835 ஆனது. ஒரே மாதத்தில் ரூ.125 அதிகரிப்பு.

2.3.2021 –            ராமர் கோயிலுக்கு ரூ.2,100 கோடி குவிந்தது.

3.3.2021 –            வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

3.3.2021 –            இந்திராகாந்தி அமல்படுத்திய எமர்ஜென்சி காலம் தவறுதான்- ராகுல்காந்தி ஒப்புதல்.

4.3.2021 –            உலகளவில் மீண்டும் கரோனா அதிகரிக்கிறது – உலக சுகாதார நிறுவனம் தகவல்.

4.3.2021 –            பணி இடத்தில் பாலியல் தொல்லையைத் தடுக்க அரசின் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – மனித உரிமை ஆணையம் உத்தரவு.

4.3.2021 –            பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் உடலில் சேறு பூசி நேர்த்திக் கடன்!

5.3.2021 –            அத்திவரதர் தரிசன டிக்கெட் விற்பனை முறைகேடு பற்றி இந்து சமய அறநிலையத் துறை விசாரணை.

6.3.2021 –            சீர்காழி காவல் நிலையம் அருகே தந்தை பெரியார் சிலை அவமதிப்பு.

7.3.2021 –            ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகே உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்- வேல்முருகன்.

7.3.2021 –            ஒடிசாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி மயக்கம்.

7.3.2021 –            100ஆவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்.

8.3.2021 –            பெரியார் சிலைக்கு தீ வைப்பு- பொதுமக்கள், தலைவர்கள் கண்டனம்.

8.3.2021 –            அண்ணா பல்கலைக்கழகத்தால் ரத்து செய்யப்பட்ட இரு பாடங்களுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை.

9.3.2021 –            காங்கோவில் மலை நிறைய தங்கம் – தோண்டி எடுத்துச் சென்ற மக்கள்.

9.3.2021 –            50% இடஒதுக்கீடு குறித்து பதில் கூற அனைத்து மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.

10.3.2021 –         வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு சட்டம் தடை விதிக்க அய்கோர்ட் மறுப்பு.

10.3.2021 –         இந்திய விவசாய சட்டங்கள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் – இந்திய அரசு கண்டனம்.

11.3.2021 –         திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான வேதபாட சாலையில் 57 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு.

11.3.2021 –         லக்னோவில் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தாக பா.ஜ.க. நிருவாகி மீது வழக்குப் பதிவு

11.3.2021 –         திருச்சி கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினை- கல்வீச்சு – தடியடி.

(தொகுப்பு : மகிழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *