1) இந்திய அரசு 2021-22 நிதியாண்டில் செலவழிக்க இருக்கும் தொகை 36.8 லட்சம் கோடி ரூபாய். அதில் 15.06 லட்சம் கோடி ரூபாயை கடன் மூலம் திரட்ட இருக்கிறது. (வரவு எட்டணா செலவு பத்தணா)
2) உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் தான் குறைவாக வசூலிக்கப்படுவதாக- நிதியமைச்சர் உரை.
வங்கியை முற்றிலும் தனியார் மயமாக்க முடிவு!
2021-22 பட்ஜெட்டில் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு நாட்டின் சொத்துகளை தாரை வார்ப்பதை மேலும் முடுக்கி விட்டுள்ளது மக்கள் விரோத மோடி அரசு.
3) “மின் விநியோகம் – தனியாருக்கு அனுமதி”
அய்.டி.பி.அய். வங்கியை தனியார் மயமாக்கிய அனுபவத்தைக் கொண்டு மேலும் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்!
(கூடிய விரைவில் நாட்டை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மொத்தமாக விற்று முடித்துவிடுவார்கள்.)
4) பட்ஜெட் – 2021-22 பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு!
பெட்ரோல் மீது லிட்டருக்கு 2 ரூபாய், டீசல் மீது லிட்டருக்கு 4 ரூபாய் என வேளாண் வரி விதிப்பு.
மத்திய அரசு பங்குகளை விற்கவுள்ள நிறுவனங்கள்: எல்.அய்.சி., பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, துறைமுக கழகம், அய்.டி.பி.அய் வங்கி, பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனம், கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியன.
நாட்டு மக்களை மேலும் மேலும் கொள்ளை அடிப்பது, நாட்டின் சொத்துகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பது, நாட்டை நாசமாக்குவது இவைதாம் பாசிச பா.ஜ.க. அரசின் கொள்கை.