11.2.2021 – 12 துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.
11.2.2021 – தொழிலாளர்களுக்கு வாரத்தில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை – மத்திய அரசு திட்டம்.
12.2.2021 – கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள்
12.2.2021 – ஹைதராபாத் மாநகராட்சி வரலாற்றில் முதன்முதல் மேயர், துணை மேயராக 3 பெண்கள் தேர்வு.
13.2.2021 – ஜாதி மறுப்புத் திருமணம் செய்த பெற்றோரின் இருவரில் ஒருவரின் ஜாதியின்படி குழந்தைக்கு சான்றிதழ் – அரசாணை வெளியீடு.
13.2.2021 – ஜாதிக் கலவரங்களைக் குறைக்க ஜாதி மறுப்புத் திருமணங்களே தீர்வு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
14.2.2021 – 7 சமூகப் பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க சட்டத்திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்.
15.2.2021 – இலங்கை, நேபாளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜனதா விரும்புகிறது – திரிபுரா முதல்வர் சர்ச்சைப் பேச்சு.
15.2.2021 – பெங்களூரு பெண் சுற்றுச் சூழலியல் ஆர்வலர் திஷாரவி கைது.
16.2.2021 – மத்திய அரசின் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற பல்கலைக்கழகங்கள் நிர்பந்தமா? – உயர்நீதிமன்றம் கேள்வி.
17.2.2021 – தமிழக அரசின் 69 சதவிகித இடஒதுக்கீட்டை எம்.டெக் படிப்புகளுக்கு இந்த ஆண்டு பின்பற்றலாம்.
17.2.2021 – புதுவை ஆளுநர் கிரண்பேடி திடீர் நீக்கம்.
17.2.2021 – ரோகிணி ஆணையம் பரிந்துரைப்படி 27% ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை 4 ஆகப் பிரித்து உள்ஒதுக்கீடு வழங்க அரசு யோசனை.
18.2.2021 – ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் – மாணவி கேள்விகளுக்கு ராகுல் பதில்.
18.2.2021 – இந்திய சைகை மொழி அகராதி வெளியீடு.
18.2.2021 – 69% இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான மனு; தமிழக அரசு பதிலளிக்க ஒரு வாரம் உச்சநீதிமன்றம் அவகாசம்.
18.2.2021 – ஆந்திராவில் வியாபாரி சிறுகச் சிறுக சேமித்த 5 லட்சம் ரூபாய் நோட்டுகளை கரையான் அரித்தது.
19.2.2021 – உ.பி. மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 2 தலித் சிறுமிகள் வயலில் சடலமாக மீட்பு.
19.2.2021 – பதவி வாங்கித் தருவதாக ரூ.100 கோடி மோசடி. பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்குத் தொடர்பு.
20.2.2021 – செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் விண்கலம் – இந்திய வம்சவாளி பெண் விஞ்ஞானி சாதனை.
20.2.2021 – அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 பட்ட மேற்படிப்புக்கு மத்திய அரசு இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு.
20.2.2021 – எய்ட்ஸை குணப்படுத்த மருந்து – சென்னை அய்.அய்.டி. விஞ்ஞானிகள் சாதனை.
21.2.2021 – நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறப்பு.
21.2.2021 – ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் மத்திய அரசு தேர்தல் கண்ணோட்டத்திலிருந்து வெளிவர வேண்டும் – ஒடிஸா முதல்வர் பேச்சு.
21.2.202 – 134 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி.
22.2.2021 – சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் நகை திருட்டு. முன்னாள் குருக்கள் மீது குற்றச்சாட்டு.
22.2.2021 – மாணவர்களுக்கு ‘காமதேனு பசு அறிவியல்’ தேர்வு. மூடநம்பிக்கையைப் பரப்புவதாக யு.ஜி.சி. மீது கேரள அறிவியல் இயக்கம் குற்றச்சாட்டு.
23.2.2021 – ராமேசுவரம் ராமநாதன் கோவிலில் ஆகம விதியையும், அர்ச்சகர்கள் தடுத்ததையும் மீறி விஜயேந்திரர் பூஜை செய்தார்.
23.2.2021 – பசு மாடு பற்றி தேர்வு – ஆயோக் தலைவரின் பதவி விலகலால் ரத்து செய்யப்பட்டது.
24.2.2021 – அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்,- ரூ.5.70 லட்சம் கோடி கடன் சுமையில் தமிழகம்.
25.2.2021 – பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது அவசியம் – மோடி.
25.2.2021 – ஜப்பானில் தற்கொலைகளை தடுக்க தனிமையாக அமைச்சகம்.
(தொகுப்பு : மகிழ்)